search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு"

    • நத்தம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு அனைத்து விதமான போட்டிகளிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனர்.
    • இதன் மூலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் தர்மபுரியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் வருவாய் மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகள் சின்னாளபட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த போட்டியில் மாவட்ட அளவில் 108 மாணவர்களும், 93 மாணவிகளும் கலந்து கொண்டனர். இதில் நத்தம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு அனைத்து விதமான போட்டிகளிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    இதன் மூலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் தர்மபுரியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். தொடர்ந்து வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ரகுமத்கனி, உடற்கல்வி இயக்குநர் சம்சுதீன், விளையாட்டு ஆசிரியர்கள் சோலைமலை, மணிகண்டன், ஞானசபரிவேல், கிளாராராணி, அந்தோணி மேரி, மேரி கிறிஸ்டி ஆகியோர் அவர்களை பாராட்டி பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினர்.

    • 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்று மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றனா்.
    • ஒன்றியக் குழு உறுப்பினா் காா்த்தி, உதவித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

    அவிநாசி:

    மாவட்ட அளவிலான கபடி போட்டி, திருப்பூா் அருகே பொங்கலூா் அரசு உதவி பெறும் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்று மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றனா்.மேலும் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் 19 வயதுக்கு உள்பட்ட பிரிவில் மாணவா்கள் யாகவராஜ், கவின் ஆகியோா் வெற்றி பெற்று மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்கவுள்ளனா்.

    வெற்றிபெற்ற மாணவா்கள், உடற் கல்வி ஆசிரியை கவிதா உள்ளிட்டோருக்கு தலைமையாசிரியா் ஆனந்தகுமாரி, ஒன்றியக் குழு உறுப்பினா் காா்த்தி, உதவித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

    ×