என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விற்பனைஅதிகரிப்பு"
- நாமக்கல் நகரில் இன்று பூ, பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.
- நாமக்கல் பூங்கா சாைல, திருச்செங்கோடு ரோடு, துறையூர் ரோடு, ெகாசவம் பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் பூ, பழங்கள் வாங்க அதிகளவில் திரண்டு வந்தனர்.
பரமத்திவேலூர்:
ஆயுதபூஜை விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாமக்கல் நகரில் இன்று பூ, பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல் பூங்கா சாைல, திருச்செங்கோடு ரோடு, துறையூர் ரோடு, ெகாசவம் பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் பூ, பழங்கள் வாங்க அதிகளவில் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு தேவையான பழங்கள், பூ, பொரி மற்றும் சுண்டல், வாழை கன்று ஆகியவற்றை வாங்கி சென்றனர்.
ஆயுதபூஜையை முன்னிட்டு இன்று வழக்கத்தை விட விற்பனை அதிகரித்த நிலையில் விலையும் உயர்ந்து காணப்பட்டது. நாமக்கல்லில் ஒரு கிலோ ஆப்பிள் ரூ.150 முதல் ரூ.200 வரையும், ஆரஞ்சு ஒரு கிலோ ரூ.100-க்கும், மாதுளை கிலோ ரூ.150 முதல் ரூ.170-க்கும் விற்பனையானது. ேமலும் கொய்யாபழம் கிலோ ரூ.80-க்கும், திராட்சை கிலோ ரூ.220-க்கும் விற்பனையானது.
பூக்கள் விலை உயர்வு
பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1200-க்கும், சம்பங்கி கிலோ ரூ.250- க்கும், அரளி கிலோ ரூ.520- க்கும், ரோஜா கிலோ ரூ.500- முல்லைப் பூ கிலோ ரூ.1000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.500- க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும் ஏலம் போனது. ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்செங்கோடு
இதே போல் நாமக்கல் மாவட்டத்தில் குமார பாளையம், பள்ளி பாளையம், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூர், சேந்தமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் கடைவீதிகளில் இன்று கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்கி சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்