search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டடம்"

    • பழைய மசூதி கட்டடத்தில் நேற்று மதியம் திடீரென விரிசல் ஏற்படத் தொடங்கியது.
    • சீட்டுக்கட்டுபோல் சரிந்து தரைமட்டமாகும் காட்சிகள் கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

    உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களால் பக்ரீத் பெருநாள் நேற்று [ஜூன் 17] திங்கட்கிழமை கோலாகலாமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் பக்ரீத் கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில் டெல்லியில் ஸ்திரத்தன்மையை இழந்து மசூதியின் பெரும்பகுதி இடிந்து விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    பழைய டெல்லியில் சூடிவாலா பகுதியில் நெருக்கமான கட்டடங்கள் நிறைந்த தெருவொன்றில் இருந்த சங்கமர்மர் என்ற பழைய மசூதி கட்டடத்தில் நேற்று மதியம் திடீரென விரிசல் ஏற்படத் தொடங்கியது. இதனால் சுதாரித்துகொண்டு அங்கிருத்தவர்கள் உடனே வெளியேறியனர். அதனைத்தொடர்ந்து மசூதியின் பெரும் பகுதி சீட்டுக்கட்டுபோல் சரிந்து தரைமட்டமாகும் காட்சிகள் கொண்ட வீடியோ வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    சரியான நேரத்தில் மசூதியிலுந்தும் அருகில் இருந்த 3 கட்டிடங்களில் இருந்தும் அனைவரும் வெளியேறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த தெருவில் உள்ள சாலை சற்று கீழிறங்கியதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    • பணத் தகராறு காரணமாக ஒருவரை கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து தூக்கி வீசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • மதேகஞ்ச் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை அருகில் இருந்த வீடுகளில் உள்ளவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதை அடுத்து வைரலாகத் தொடங்கியது.

    லக்னோவில் பணத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஐந்து பேர் சேர்ந்து ஒருவரை கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து தூக்கி வீசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மதேகஞ்ச் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை அருகில் இருந்த வீடுகளில் உள்ளவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதை அடுத்து வைரலாகத் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பரபரப்பூட்டும் அந்த வீடியோவில், ஒருவரை கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்து வந்து அவரை உதைத்து கொலை செய்யும் நோக்கத்துடன் துண்டுக்கட்டாக தூங்கி கீழே வீசியது பதிவாகியுள்ளது. அதிஷ்டவசமாக அந்த நபர் சிறிய காயங்களுடன் உயிர்பிழைத்தார்.

     

    இருப்பினும் அதற்குப் பிறகும் கீழே இறங்கி வந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் தடுக்க முயன்றும் அவர்கள் தங்கள் தாக்குதலை தொடர்ந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    புதுக்கோட்டை கொத்தமங்கலத்தில்ரூ.1.25 கோடி மதிப்பீல் ஆரம்ப சுகாதார மைய கட்டடம்

    ஆலங்குடி 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்த மங்கலத்தில் மாநிலங்க ளவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 1.25 கோடி மதிப்பீட்டில் மேம்படு த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா ஆகியோர் கட்டடப் பணியினை துவக்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டங்களை வழங்கினர்.

    திருமயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசுப்புராம் வரவேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ப. சிதம்பரம் பேசியதாவது:-

    இந்த கட்டடத்தில் அலுவலகத்துறை, மருத்துவ அலுவலர் பணியாளர் அறை, மருத்துவ அறை ,அவசர வார்டு ஆய்வகம், ஆண் பெண் மாற்றுத்தி றனாளிகள் கழிவறைகள் உள்ளிட்டவைகள் 257.65 சதுர மீட்டர் அளவு பரப்பளவில் கட்டப்பட உள்ளது என்று அவர் பேசினார்.

    அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:-

    கொத்தமங்கலத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்று அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடியார், திருரவங்குளம் ஒன்றிய குழு தலைவர் வள்ளியம்மை, தங்கமணி, அறந்தாங்கி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், ஆலங்குடி தாசில்தார் பெரியநாயகி, சுகாதார துணை இயக்குனர் மருத்துவர் நமசிவாயம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வளர்மதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன், வட்டார காங்கிரஸ் தலைவர் பன்னீர்செல்வம் , ராகுல் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

    ×