என் மலர்
நீங்கள் தேடியது "500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவில்"
- கார்ணாம்பட்டு கோவிலை சீரமைக்க கோரிக்கை
- மக்கள் வழிபாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
வேலூர்:
காட்பாடி அருகே உள்ள கார்ணாம்பட்டு கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் சிதிலமடைந்து காணப்படுகிறது.
அந்த பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி கோவிலில் பூஜை நடத்தி வருகின்றனர். கோவிலை சீரமைக்க வேண்டும் மக்கள் வழிபாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என இந்து முன்னணி சார்பில் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவிலை சீரமைக்க வலியுறுத்தி கார்ணாம்பட்டில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கோட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் ராமன் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து கோட்டதலைவர் மகேஷ் கூறியதாவது:-
கைலாசநாதர் கோவில் 500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கற்கோவில் ஆகும். இந்து சமய அறநிலையத்துறை முறையாக பாதுகாக்க வில்லை.
கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இருப்பினும் கோவிலில் நாள்தோறும் பூஜைகள் நடத்த கூட இந்து சமய அறநிலைத்துறை முயற்சிக்கவில்லை.
சிவ பக்தர்கள் நாள்தோறும் வழிபாடு நடத்துகின்றனர். கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். நிதி ஒதுக்கியதாக கூறினர்.
ஆனால் இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கோவிலை சீரமைக்க உடனடியாக பணிகளை தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.