என் மலர்
நீங்கள் தேடியது "கருங்கல் ஏற்றி வந்த"
- லாரியை சோதனை செய்ததில் அனுமதிச்சீட்டு இல்லாமல் கருங்கல் எடுத்து சென்றது தெரியவந்தது
- பிடிபட்ட லாரியை புவியியல் மற்றும் சுரங்க துறையினர், பங்களாப்புதூர் போலீசில் ஒப்படைத்தனர்
டி.என்.பாளையம்,
சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் டி.என்.பாளையம் தனியார் கல்லூரி அருகே வன ச்சாலை ரோட்டில் புவியியல் மற்றும் சுரங்க துறை சார்பில் உதவி புவியியலாளர் லட்சுமி ராம்பிரசாத் தலைமையில் கனிம திருட்டு குறித்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்ததில் அனுமதிச்சீட்டு இல்லாமல் கருங்கல் எடுத்து சென்றது தெரியவந்தது. லாரியை ஓட்டி வந்த டிரைவர் மனோஜிடம் விசாரணை செய்ததில் டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் கிரஷரில் 3 யூனிட் சாதாரண கருங்கல் எடுத்து வந்தது தெரிந்தது.
இதையடுத்து அதிகாரிகள் டிரைவர் மனோஜிடம் மேலும் விசாரணை செய்ய முயன்றபோது அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து பிடிபட்ட லாரியை புவியியல் மற்றும் சுரங்க துறையினர், பங்களாப்புதூர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.