search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிபந்தனைகள்"

    • டெல்லியில் இருந்து கேரளா வரை உள்ள மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளில் போராட்டம் நடந்து வருகிறது
    • ஆர்.ஜி மருத்துவமனை வளாகத்தை சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    பெண் டாக்டர் கொலை வழக்கில் இந்திய மருத்துவ சங்கம் 5 நிபந்தனைகள்

    மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குற்றத்தில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கு சிபிஐ வசம் சென்றுள்ளது. உயிரிழந்த சக மருத்துவருக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

    இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை இந்திய மருத்தவ சங்கம் [IMA]அறிவித்துள்ளது. இதன்படி எமெர்ஜென்சி சேவைகள் தவிர்த்து வெளி நோயாளுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படாது. டெல்லியில் இருந்து கேரளா வரை உள்ள மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளில் இந்த போராட்டமானது நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த போராட்டத்தின் நோக்கம் குறித்தும், மருத்துவர்களின் பாதுகாப்பை வருங்காலங்களில் உறுதி செய்யவும் ஐந்து நிபந்தனைகளை இந்திய மருத்துவ சங்கம் முன்மொழிந்துள்ளது

    இந்திய மருத்துவ சங்கத்தின் 5 நிபந்தனைகள் 

    ◆தற்போது நடந்துபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, 'மத்திய சுகாதாரத்துறை பாதுகாப்பு சட்டத்தில்' விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்

    ◆இந்த வழக்கை குறுகிய காலத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். கடந்த ஆகஸ்ட் 14 அன்று அத்துமீறி நுழைந்து ஆர்.ஜி மருத்துவமனை வளாகத்தை சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    ◆மருத்துவமனை வளாகங்களைப் பாதுகாக்கப்பட மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் விமான நிலையங்களில் இருக்கும் அளவுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதற்குக் குறைவான பாதுகாப்பை ஏற்க முடியாது. சிசிடிவி கண்கணிப்பை அதிகரித்து, பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

    ◆உயிரிழந்த பெண் மருத்துவர் வேலை செய்து வந்த 36 மணி நேர பணி ஷிப்ட் உட்பட, ரெசிடெண்ட் மருத்துவர்களின் பணி மற்றும் பாதுகாப்பு சூழலை மேம்படுத்தும் வகையில் முழுமையான மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் 

    ◆பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழக்கப்பட்ட கொடுமைக்குக்கு அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 5 நிபந்தனைகளை முன்மொழிந்துள்ளது.

    • தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக “பசுமை தொழில் முனைவு திட்டம்” உருவாக்கப்பட்டுள்ளது.
    • விண்ணப்பிக்கும் நிறுவனம் தொடங்கி ஓராண்டிற்கு மேல் தொடர் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

    கடலூர்:

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், சுற்றுசூழலுக்கு உகந்த பசுமை செயல்பாடுகளை உருவாக்கி லாபத்துடன் கூடிய உற்பத்தி, விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தி, பொருளாதார ரீதியாக மேம்படுத்திட பசுமை தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக "பசுமை தொழில் முனைவு திட்டம்" உருவாக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினரால் நடத்தப்படும் பசுமை நிறுவனங்கள் மட்டுமே தேர்வு செய்யப்படும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை நிறுவனங்களை முன்னெடுக்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் தொழில் குறித்து தொழில் முனைவோர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் நிறுவனம் தொடங்கி ஓராண்டிற்கு மேல் தொடர் செயல்பாட்டில் இருக்க வேண்டும். நிறுவனம் கட்டாயம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அங்கீகாரம் மற்றும் ஜி.எஸ்.டி. பதிவு பெற்றிருக்க வேண்டும்.

    விண்ணப்பிக்கும் நிறுவனமானது குறைந்தபட்சம் 3 வேலையாட்களை கொண்டு செயல்படக்கூடிய நிறுவனமாக இருக்க வேண்டும். தொழில் நிறுவனம் இணையதளத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். நிறுவனத்தின் ஆண்டு வருமானம் குறைந்தது ரூ.4 லட்சமாக இருக்க வேண்டும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைக்கு உட்படுத்தப்பட்ட வெள்ளை மற்றும் பச்சை தொழில் நிறுவனங்களால் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும். விருப்பமுள்ளோர் வருகிற 15 -ந் தேதிக்குள் கடலூர் புதுப்பாளையம் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை பெற்று விண்ணப்பிக்கலாம்.

    ×