என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "கனடா எல்லை"
- கனடா மற்றும் மெக்சிகோ எல்லையில் இருந்து இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர்.
- இந்த ஆண்டு கனடா எல்லை வழியாக நுழைய முயன்ற 30 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.
வாஷிங்டன்:
கனடா மற்றும் மெக்சிகோ எல்லையில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை காவல்துறை தெரிவித்துள்ளது.
2020-ம் ஆண்டில் 19,883 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
2021-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்து, 30,662 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். 2022-ம் ஆண்டு சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்ததற்காக 63,927 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்து சுமார் 96,917 இந்தியர்கள் சிக்கியுள்ளனர் என அமெரிக்க சுங்க மற்றும் எல்லை காவல்துறை தெரிவித்துள்ளது.
இது அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரம். 2019-20-ம் ஆண்டு புள்ளி விவரத்துடன் ஒப்பிடுகையில் இது 5 மடங்கு அதிகமாகும்.
கனடா எல்லை வழியாக நுழைய முயன்ற 30 ஆயிரம் பேரும், மெக்சிகோ எல்லை வழியாக நுழைய முயன்ற 41 ஆயிரம் இதில் அடக்கம் என தெரிவித்துள்ளது.