என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கம்பளிப்புழு தாக்குதல்"
- பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
- தற்பொழுது பூச்சிகளுக்கு சாதகமான கால சூழ்நிலை நிலவுவதால் நிலக்கடலையில் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்பொழுது பூச்சிகளுக்கு சாதகமான கால சூழ்நிலை நிலவுவதால் நிலக்கடலையில் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழுவின் தாக்குதல் பொருளாதார சேதநிலைக்கு அதிகமாக உள்ளதால் விவசாயிகள் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். என வேளாண்மைத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக சிவப்பு கம்பளிப்புழு தாக்குதல் உள்ள வயல்களில் ஒரு ஏக்கருக்கு சைபர்மெத்ரின் 3 சதம் மற்றும் குயினால்பாஸ் 20 சதம் ஈசிகலந்த 500 மில்லி ரசாயன மருந்து கலவையை 120 லிட்டர் தண்ணீருடன் செடியில் மருந்து ஒட்டுவதற்கு 25 மில்லி சிலிகான் ஒட்டும் திரவம் கலந்து உடனே தெளிக்குமாறு விவசாயிகளை கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி அறிவுறுத்தியுள்ளார்.