search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலய மணி"

    • 2 ஆலய மணிகளும் இன்று முதல் 22-ந்தேதி வரை 3 நாட்கள் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
    • 92 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பழமை மாறாமல் புத்தம் புதிதாக உள்ளது

    இரணியல் :

    நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை, தோட்டி யோட்டில் இருந்து திங்கள்சந்தை செல்லும் சாலையில் அமைந்துள்ளது கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம்.

    உலகிலேயே புனிதராக அறி விக்கும் முன்பே சிறுமலர் தெரேசா வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் கண்டன்விளை புனித தெரேசா ஆலயம் ஆகும்.

    இந்த ஆலயம் 1924-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந்தேதி அன்றைய கொல்லம் மறைமாவட்ட ஆயர் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகரால் அர்ச்சிக்கப்பட்டது. 1925-ம் ஆண்டு மே 17-ந்தேதி சிறுமலர் தெரேசா புனிதராக அறிவிக்கப்பட்டார்.

    புனிதையின் (சிறுமலர் தெரேசா) உடன் பிறந்த 2 சகோதரிகளால் 1931-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 2 ஆலய மணிகள் இன்றும் தனது மணி ஓசையால் பக்தர்களின் இதயங்களில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. புனிதையின் பேர ருளிக்கம் (புனிதப்பண்டம்) ஆலயத்தில் உள்ளது. கண்டன் விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயத்தில் உள்ள இந்த 2 ஆலய மணிகளும் இன்று (20-ந்தேதி) முதல் 22-ந்தேதி வரை 3 நாட்கள் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த 2 ஆலய மணிகளில் ஒன்றில் புனித தெரேசா உருவப்படமும், மற்றொன்றில் திருச்சிலுவையும் பொறிக் கப்பட்டுள்ளது. அதில் ஒரு ஆலய மணியில் "புனித தெரேசாவாகிய நான் இந்தியாவில் உள்ள அனைத்து பக்தர்களையும் கண்டன்விளைக்கு அழைப்பேன்" என ஆங்கிலத்தில் எழுதப் பட்டுள்ளது. கண்டன்விளை ஆலய மணி கோபுரத்தில் சுமார் 60 அடி உயரத்தில் அமைக்கப்பட்டி ருந்த இந்த 2 ஆலய மணிகள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திருப்பலி நாட்களில் ஒரு ஆலய மணியும், திருவிழா காலங்கள் மற்றும் சிறப்பு திருப்பலி வேளைகளில் 2 மணிகளும் ஒலிக்கப்படும்.தற்போது இந்த 2 ஆலய மணிகளும் பராமரிப்பு பணி களுக்காக கீழே இறக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க ஆலய மணிகள் என்பதால் இவற்றை பார்வையிட பங்குமக்கள் மட்டுமன்றி பல்வேறு தரப்பினர் விருப்பம் தெரிவித்தனர்.

    இதையடுத்து இந்த 2 ஆலய மணிகளும் பக்தர்கள் பார்வைக்காக 3 நாட்கள் வைக்கப்படுகிறது. ஆலயம் மற்றும் ஆலய மணி குறித்த ஆய்வுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என ஆராய்ச்சி மாணவர்கள் தெரிவித்தனர். இந்த 2 ஆலய மணிகளும் 92 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பழமை மாறாமல் புத்தம் புதிதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மாலை மற்றும் மெழுகுவர்த்தியுடன் வந்து ஆலய மணியை பார்வையிட்டு வழிபட்டு செல்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை காரங்காடு வட்டார முதல்வரும், கண்டன்விளை பங்கு தந்தையுமான அருட்பணி சகாயஜஸ்டஸ், பங்குப்பேரவை துணை தலைவர் ஜெஸ்டஸ், செயலாளர் ஐசக், பொருளாளர் வறுவேலாள், துணை செயலாளர் லில்லிமலர் மற்றும் பங்கு இறைமக்கள் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.

    • பதினெட்டாம் படி ஏறியதும் இரண்டு விசேஷங்களை நாம் தரசிக்க வேண்டும்.
    • அதன் பினனர் அந்த சிலையை உருக்கி, மணியாக வடிவமைத்தனர்.

    பதினெட்டாம் படி ஏறியதும் இரண்டு விசேஷங்களை நாம் தரசிக்க வேண்டும்.

    ஒன்று கொடி மரத்தில் அமைந்திருக்கும் குதிரை.

    மற்றொன்று 18ம் படிக்கும் இடைபுறம் உள்ள ஆலய மணி.

    ஆதியில் சபரிமலையில் பரசுராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பன் சிலை (பஞ்சலோக விக்கிரகம்), காலப் போக்கில் இயற்கைச் சீற்றத்தால் சற்று சேதமானது.

    1950ம் ஆண்டு அந்தச் சிலை மேலும் சேதமடைந்ததாக சொல்லப்படுகிறது.

    அதன் பினனர் அந்த சிலையை உருக்கி, மணியாக வடிவமைத்தனர்.

    18ம் படி இருக்கும் இடத்தில், வலம் இடம் என இருபுறமும் அங்கு மணிகள் இருக்கும்.

    அதில், இடப் பக்கமாக உள்ள மணிதான், ஆதிகாலத்தில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பனின் திருஉருவச்சிலை.

    ×