என் மலர்
நீங்கள் தேடியது "புற்றுநோய் சிகிச்சை"
- மதிய நேர சந்திப்புகள் ஒத்திவைக்கப்படுகின்றன.
- மருத்துவ ஆலோசனையின் பேரில் நிகழ்ச்சிகள் மாற்றியமைக்கப்படும்.
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) தனது சந்திப்புகளை அவர் ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்து இருக்கிறது.
இது குறித்து வெளியாகி இருக்கும் அறிக்கையில், "இன்று காலை புற்றுநோய்க்கான திட்டமிடப்பட்ட, தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து, மன்னருக்கு மருத்துவமனையில் சிறிது நேர கண்காணிப்பு தேவைப்படும் தற்காலிக பக்க விளைவுகள் ஏற்பட்டன. இன்றைய தினம் அவரது மதிய நேர சந்திப்புகள் ஒத்திவைக்கப்படுகின்றன," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்க விளைவுகள் ஏற்பட்டதை தொடர்ந்து 78 வயதான இங்கிலாந்து அரச தலைவர் கிளாரன்ஸ் ஹவுசில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார். மன்னர் வீட்டில் நல்ல நிலையில் இருப்பதாகவும், அங்கு அவர் மாநில ஆவணங்களில் பணிபுரிந்து வருவதாகவும், அழைப்புகளைச் செய்து கொண்டிருந்ததாகவும் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மருத்துவ ஆலோசனையின் பேரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று (வெள்ளிக்கிழமை) நிகழ்ச்சிகள் மாற்றியமைக்கப்படும்.
- பெண்களை அச்சுறுத்தும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்று
- இதுநாள் வரை நோய்க்கான சிகிச்சைமுறையில் இது பயன்படுத்தப்பட்டு வந்தது
உலகெங்கும் மக்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று கேன்சர் (cancer) எனப்படும் புற்று நோய்.
ஆண்களையும் பெண்களையும் தாக்க கூடிய புற்றுநோயை, வரும் முன் தடுக்கும் மருத்துவ முறைகள் குறித்து முன்னணி உலக நாடுகள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
பெண்களை அச்சுறுத்தும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்று.
இங்கிலாந்தில், வருடாவருடம் சராசரியாக 47,000 பெண்கள் மார்பக புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். சுமார் 3 லட்சம் பெண்களுக்கு இந்நோய் வருவதற்கான மிதமான மற்றும் அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பல வருடங்களாக பெண்களின் மார்பக புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த அனஸ்ட்ரசோல் (anastrozole) எனும் மருந்தை தற்போது நோய் தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்த இங்கிலாந்தின் மருந்து மற்றும் உடலாரோக்கிய பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் (Medicines And Healthcare Products Regulatory Agency) உரிமம் வழங்கியுள்ளது.
புற்று நோய் சிகிச்சை மருத்துவர்களும், பெண்களும் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். அனஸ்ட்ரசோல், காப்புரிமை தேவை இல்லாத மருந்து என்பதால் குறைவான விலையில் இதனை இனி பல மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தயாரிக்க இயலும். அனஸ்ட்ரசோல் மார்பக புற்றுநோய் வருவதை தடுப்பதில் அதிக திறன் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
விலை குறைவாக உள்ளதால் இதுவரை லட்சக்கணக்கில் ஏற்பட்டிருந்த நோய்சிகிச்சைக்கான செலவினங்களை இது குறைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமும் 1 மில்லிகிராம் (1 mg) அனஸ்ட்ரசோல் மாத்திரையை 5 வருடங்கள் எடுத்து கொண்ட பெண்களில் 50 சதவீதம் பேருக்கு நோய் தாக்குதல் ஏற்படவில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
"அனஸ்ட்ரசோல் மருந்திற்கு நோய் தடுப்பு சிகிச்சைக்கான அனுமதி வழங்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய்க்கு இதுநாள் வரை இது சிறப்பாக சிகிச்சை மருந்தாக இருந்து வந்தது. இனிமேல் பெண்களுக்கு இந்த நோய் வருவதை தடுக்கவும் இதனை பயன்படுத்த முடியும்" என இது குறித்து இங்கிலாந்தின் சுகாதார அமைச்சர் வில் குவின்ஸ் தெரிவித்தார்.
- பிப்ரவரி 6 அன்று மன்னர் சார்லசுக்கு கேன்சர் இருப்பதாக அரண்மனை தெரிவித்தது
- உலகெங்கிலும் இருந்து 7 ஆயிரத்திற்கும் மேலான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது
கடந்த பிப்ரவரி மாதம், இங்கிலாந்து மன்னரான மூன்றாம் சார்லஸ், புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக பிரிட்டிஷ் அரண்மனை அதிகாரபூர்வமாக கடந்த பிப்ரவரி 6 அன்று தெரிவித்தது. ஆனால், எந்த வகையான கேன்சர் என்பது பற்றியோ உடலின் எந்த பாகத்தில் உள்ளது என்பது குறித்தோ அரண்மனை அலுவலகம் தகவல் வெளியிடவில்லை.
மேலும், மன்னர் சார்லஸ் இதனால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் என்றும், அவர் புற்று நோய்க்கான சிகிச்சை பெற தொடங்கி விட்டதாகவும் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலகெங்கும் உள்ள பல முக்கிய தலைவர்கள் செய்தி அனுப்பி வந்தனர்.
மேலும், பல இங்கிலாந்து மக்களும் மன்னர் சார்லஸ் நலம் பெற அவருக்கு கடிதங்கள் அனுப்பி வருகின்றனர்.
இதுவரை உலகெங்கிலும் இருந்து 7 ஆயிரத்திற்கும் மேலான கடிதங்கள் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
குறிப்பாக, குழந்தைகள் தங்கள் கைப்பட எழுதி மற்றும் வரைந்து அனுப்பியுள்ள கடிதங்கள் தினந்தோறும் அரண்மனையில் குவிகின்றன.

இது குறித்து மன்னர் சார்லஸ் தெரிவித்திருப்பதாவது:
இது போன்ற அன்பான எண்ணங்கள்தான் எனக்கு பெரும் ஆறுதலையும், ஊக்கத்தையும் தருகின்றன. பல கடிதங்களை படிக்கும் போது எனக்கு கண்களில் நீரே வந்து விட்டது.
நான் நலமடைய விரும்பும் அனைவருக்கும் என் நன்றி.
எனக்காக நேரம் ஒதுக்கி தங்களின் அன்பான வார்த்தைகளால் கடிதம் எழுதிய அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு சார்லஸ் தெரிவித்தார்.
- ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் தினந்தோறும் நோயாளிகள் இங்கு ஏராளமானோர் வருகிறார்கள்.
- கருவி பொருத்தப்பட்டதும் தினந்தோறும் கூடுதலாக 100 புற்றுநோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் ஆஸ்பத்திரி செயல்படுகிறது. இங்கு புதுச்சேரி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் தினந்தோறும் நோயாளிகள் இங்கு ஏராளமானோர் வருகிறார்கள்.
இதற்கிடையே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஏற்கனவே அதிநவீன கதிரியக்க கருவி உள்ளது. ஆனால் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் இருந்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு ஜிப்மரில் புற்று நோயாளிகளுக்கு விரைந்து கதிரியக்க சிகிச்சை அளித்திடும் வகையில் ரூ.30 கோடியில் அதிநவீன கருவி வாங்க மத்திய சுகாதாரத்துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்த கருவி பொருத்தப்பட்டதும் தினந்தோறும் கூடுதலாக 100 புற்றுநோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக கூடுதல் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமிக்கவும் மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
- இவரது கருத்துக்கள் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.
- அவருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு சத்தீஸ்கர் சிவில் சொசைட்டி ரூ. 850 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக நவ்ஜோத் சிங் சித்து தனது மனைவி நவ்ஜோத் கவுர் சித்து கடின உணவு முறையை பின்பற்றி 40 நாட்களுக்குள் 4-ம் நிலை புற்றுநோயை சரி செய்ய முடிந்தது என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கள் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.
நவ்ஜோத் சிங் சித்து கூறியது உண்மைக்கு முரணான தகவல் என்று கூறும் சத்தீஸ்கர் சிவில் சொசைட்டி சார்பில் அவருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இது குறித்து சொசைட்டி உறுப்பினரும் மருத்துவருமான குல்தீப் சோலங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நவ்ஜோத் சித்து தனது மனைவி 4-ஆம் நிலை புற்றுநோயில் இருந்து அலோபதி மருந்துகளின்றி அற்புதமாக குணமடைந்துவிட்டதாக கூறுவது சந்தேகத்திற்குரியது மற்றும் தவறானது.
இது புற்றுநோயுடன் போராடுபவர்களிடம் அலோபதி மருந்துகள் மீதுள்ள நம்பிக்கையை இழக்க செய்து, அவர்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். சித்து தெரிவித்த கருத்துக்களை தொடர்ந்து அவர் மீது சொசைட்டி சார்பில் ரூ. 850 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த நோட்டீசில் அவர் கூறும் கருத்துக்களை நிரூபிக்கும் மருத்துவ ஆதாரங்களை ஒருவார காலத்திற்குள் சமர்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மேலும், அவர் தான் கூறிய கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இவற்றுக்கு பதில் அளிக்காத பட்சத்தில் ரூ. 850 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
"எலுமிச்சை நீர், துளசி இலை, மஞ்சள், வேப்பிலை உள்ளிட்டவைகளை எடுத்துக் கொண்டு வந்தால் புற்றுநோயில் இருந்து விடுபடலாம் என்று கூறும் உங்களது கணவரின் புற்றுநோய் சிகிச்சை முறையை ஆதரிக்கின்றீர்களா? என்று நோட்டீசில் நவ்ஜோத் கவுரிடம் கேட்டுள்ளது.
- அமெரிக்காவில் மியாமி மாகாணத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை.
- சிவராஜ்குமாருக்கு செயற்கை சிறுநீரகப்பை பொருத்தப்பட்டுள்ளது.
பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறுநீரகப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அவர் சிகிச்சைக்காக கடந்த 18ம் தேதி அமெரிக்கா சென்றார்.
அங்கு, அமெரிக்காவில் மியாமி மாகாணத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவர் முருகேஷ் மனோகர் மேற்பார்வையில் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மருத்துவரின் ஆலோசனையின்படி, சிவராஜ்குமாருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவராஜ்குமாருக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுநீரகப்பை அகற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிவராஜ்குமாருக்கு செயற்கை சிறுநீரகப்பை பொருத்தப்பட்டுள்ளது.
தற்போது, சிவராஜ்குமாரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அவரே வீடியோ ஒன்றை வெளியிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.