search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிவிரைவு ரெயில்"

    • தஞ்சை-சென்னை இடையே அதிவிரைவு ரெயிலை இயக்க வேண்டும்.
    • திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பூதலூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி இயக்க வேண்டும்.

    தஞ்சாவூர்

    காவிரி டெல்டா ரெயில்வே பயணிகள் சங்க த்தின் தலைவர் அய்யனா புரம் நடராஜன், செயலாளர் வக்கீல் ஜீவக்குமார், துணைச்செ யலாளர் கண்ணன், துணை தலைவர் பேராசிரியர் திருமேனி, சோளகம்பட்டி ஊராட்சி தலைவர் மேனகா முத்துசாமி ஆகியோர் தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருந்த தாவது:-

    திருச்சி -தஞ்சாவூர் இடையில் உள்ள சோழகம்பட்டி ரெயில் நிலையத்தில் ரெயில்வே கேட் அமைக்க வேண்டும்.

    தஞ்சை - சென்னை இடையே ரெயில் பயண தூரத்தை குறைக்கும் வகையில் தஞ்சையை அடுத்த திட்டை கிராமத்தில் இருந்து அரியலூருக்கு சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு புதிய ரெயில் வழித்தடம் அமைக்க வேண்டும்.

    திருச்சி-தஞ்சை-வேளாங்கண்ணி-காரைக்கால் மார்க்கத்தில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக மின்சார ரெயி ல்கள் இயக்க வேண்டும்.

    காரைக்கால்-திருச்சி பயணிகள் ரெயிலை தஞ்சை யில் மாலை 5.50 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.

    திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை முன்புபோலவே திருச்சியில் காலை 7.35 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்.

    திருச்சி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலை வேளாங்கண்ணி வரை இயக்க வேண்டும்.

    தஞ்சையில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் புதிதாக அதி விரைவு ரெயில் இயக்க வேண்டும்.

    திருச்செந்தூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை பூதலூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி இயக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×