என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஏகே 47"
- போலீசார் சுட்டதில் துப்பாக்கி குண்டு காயத்துடன் அவர்கள் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றிருக்கின்றனர்.
- 3 மாவோயிஸ்ட்டுகளையும் பிடிப்பதற்காக வனப்பகுதிகளில் தீவிர தேடுதல்வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கம்பமலை பகுதியில் உள்ள அரசு அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் மாவோயிஸ்ட்டுகள் தடுப்புபிரிவான தண்டர் போல்ட் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் வயநாடு மாவட்டம் மானந்தவாடி தாலுகா தலப்புழா பேரிளா சம்பாரத்து கிராமத்தை சேர்ந்த வாடகை கார் டிரைவரான அனீஸ் என்பவரின் வீட்டுக்குள் நேற்று முன்தினம் இரவு 4 மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கிகளுடன் நுழைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த கேரள தண்டர்போல்ட் போலீசார் மற்றும் கமாண்டோ படையினர் அங்கு சென்றனர். அப்போது மாவோயிஸ்ட்டுகளுக்கும், போலீசாரும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டபடி மோதலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இந்நிலையில் சந்துரு (வயது36), உன்னி மாயா(31) ஆகிய 2 மாவோயிஸ்ட்டுகளை போலீசார் கைது செய்தனர். லதா, சுந்தரி ஆகிய 2 பெண்கள் உள்பட 3 மாவோயிஸ்ட்டுகள் தப்பிவிட்டனர். போலீசார் சுட்டதில் துப்பாக்கி குண்டு காயத்துடன் அவர்கள் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றிருக்கின்றனர்.
அவர்களை பிடிக்க தண்டர்போல்ட் போலீசார் மற்றும் கமாண்டோ படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டுகள் சந்துரு மற்றும் உன்னிமாயா ஆகிய இருவரிடம் இருந்தும் ஏ.கே.47, இன்சாஸ் லைட் மெஷின்கன் உள்ளிட்ட துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
அவர்களுக்கு இது போன்ற நவீன துப்பாக்கிகள் எப்படி கிடைத்தது? என்பது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களுக்கு வடமாநிலங்களில் இருந்து இந்த நவீன ரக துப்பாக்கிகள் கிடைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அதுபற்றி போலீஸ் காவலில் உள்ள சந்துரு, உன்னிமாயா ஆகிய மாவோயிஸ்ட்டுகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் சிறப்பு புலனாய்வு பிரிவினரும் விசாரணை நடத்த உள்ளனர்.
அதே நேரத்தில் காட்டுக்குள் தப்பிச்சென்ற 3 மாவோயிஸ்ட்டுகளையும் பிடிப்பதற்காக வனப்பகுதிகளில் தீவிர தேடுதல்வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வனப்பகுதிகளில் ஆளில்லாத விமானத்தை பறக்கச்செய்து போலீசார் கண்காணித்தனர். ஆனால் தப்பிச்சென்றவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்