என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவன் தற்கொலை முயற்சி"

    • ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மாணவனை ஆசிரியர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • மாணவனின் தற்கொலை முயற்சி குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை நீலாம்பூர் அருகே உள்ள குளத்தூரை சேர்ந்தவர் 12 வயது சிறுவன். இவர் அந்த பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி முடிந்ததும் நண்பர்களுடன் வளாகத்தில் விளையாடிக் கொண்டு இருந்தார்.

    அப்போது மாணவன் 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியின் ஜடையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவி ஆசிரியையிடம் கூறினார். ஆசிரியை மாணவனை அழைத்து கண்டித்தார். பின்னர் இது குறித்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனால் பயந்த மாணவன் பள்ளியில் உள்ள 2-வது மாடிக்கு சென்றார். அங்கு இருந்து கீழே குதித்தார். இதனை பார்த்து சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மாணவனை ஆசிரியர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு மாணவனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×