என் மலர்
நீங்கள் தேடியது "நகையை எடுத்து"
- ரோட்டில் தங்க செயின் கீழே கிடந்தது.
- அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ராமச்சந்திரன் போலீசிடம் அந்த நகையை கொடுத்தார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா அலுவலகம் அருகே டீக் கடைகள் மற்றும் ஜெராக்ஸ் கடைகள், பஸ் நிலையம், பத்ரகாளி அம்மன் கோவில், உள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதியாக இருந்து வருகின்றது.
இந்த நிலையில் அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர மூர்த்தி (45) வங்கியில் வைத்திருந்த நகையை மீட்டு கீழ்பாக்கெட்டில் வைத்து கொண்டு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக தன் பாக்கெட்டில் வைத்திருந்த 1 பவுன் தங்க செயினை தவற விட்டு விட்டார். நகை இல்லாததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசாரிடம் கூறினார்.
இந்த நிலையில் பர்கூர் 108 ஆம்புலன்சு டிரைவரான அந்தியூர் அருகே உள்ள பிரம்ம தேசத்தைச் சேர்ந்த மகேந்திரன் (30) டீக்குடிக்க தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள ஒரு கடைக்கு சென்றார்.
அப்போது அந்த பகுதியில் ரோட்டில் தங்க செயின் கீழே கிடந்தது. இதை தொடர்ந்து அவர் அந்த நகையை எடுத்து பார்த்தார். இது தங்கச்செயின் என்பதை உறுதி செய்தார்.
உடனடியாக அவர் அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ராமச்சந்திரன் என்ற போலீசிடம் அந்த நகையை கொடுத்தார்.
இதையடு த்து போலீசார் ஒலகடத்தை சேர்ந்த ஈஸ்வர மூர்த்தியிடம் செல்போனில் பேசி உடனடியாக வரவழை த்தார். இதை தொடர்ந்து போலீசார் அவரிடம் தங்க செயினை ஒப்படை த்தனர்.
மேலும் நகையை பெற்று கொண்ட ஈஸ்வரமூர்த்தி 108 டிரைவர் மகேந்திரன், போலீசார் மற்றும் அலுவலர்க ளுக்கு நன்றியை தெரிவித்து கொண்டார்.
தவறவிட்ட நகை ஒரே நாளில் கிடைத்ததை யடுத்து அவர் மகிழ்ச்சியுடன் சென்றார்.
மேலும் ரோட்டில் கிடந்த நகையை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மகேந்திரனுக்கு பொதுமக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க நண்பர்கள் தன்னார்வலர்கள் வாழ்த்து கூறி பாராட்டு தெரிவித்தனர்.