என் மலர்
நீங்கள் தேடியது "தேசிய ஆயுர்வேத தினம்"
- வியாதிகளுக்கு எந்த வகையான மருந்துகள் வழங்கப்படுகின்றன என விளக்கினார்.
- திருப்போரூர் அரிமா சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
திருப்போரூர்:
திருப்போரூர் அரசு மருத்துவமனையில், ஆயுர் வேத மருத்துவ பிரிவில், 8-வது தேசிய ஆயுர்வேத தினம் மற்றும் தன்வந்தரி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி (பொறுப்பு) மருத்துவர் கீதாராணி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மைதிலி வரவேற்றார். ஆயுர்வேத மருத்துவர் ஜெயதேவி ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்பை பற்றியும், நோய் வராமல் காத்துக்கொள்ள நாம் கடைபிடிக்க வேண்டியவைகள், உண்ண வேண்டிய உணவுகள், எண்ணைக்குளியலின் பயன்கள், அடுப்பாங்கரையில் ஆயுர்வேதம், ஆயுர்வேதத்தில் பஞ்ச கர்மா சிகிச்சைகள் போன்றவற்றை விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் வியாதிகளுக்கு எந்த வகையான மருந்துகள் வழங்கப்படுகின்றன என விளக்கினார். விழாவில் மூலிகை மருந்து பொருட்கள், நவதானியங்கள் பொது மக்களின் பார்வைக்காக காட்சிப் படுத்தப் பட்டிருந்தது. விழாவில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் திருப்போரூர் அரிமா சங்கத்தினர் கலந்து கொண்டனர். ஆயுர்வேத மருந்தாளுநர் இன்பமணி நன்றி கூறினார்.