என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எம்சிசி"
- ஹெல்மெட் பிரச்சினையால் தான் உடனடியாக தன்னால் பேட்டிங் செய்ய இயலாமல் போய் விட்டது என்று மேத்யூஸ் சொன்னதை நடுவர்கள் ஏற்கவில்லை.
- வங்காளதேச கேப்டனும் அப்பீலை வாபஸ் பெற மறுத்து விட்டார்.
லண்டன்:
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கடந்த 6-ந் தேதி டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் இலங்கை வீரர் மேத்யூசுக்கு வழங்கப்பட்ட வினோதமான 'அவுட்' சர்ச்சையை கிளப்பியது. சமரவிக்ரமா ஆட்டம் இழந்ததும் களம் புகுந்த மேத்யூஸ் தனது 'ஹெல்மெட்'டில் வார் அறுந்து விட்டதால் மாற்று 'ஹெல்மெட்' கொண்டு வரும்படி வெளியில் இருந்த சக வீரரை அழைத்தார்.
இதனால் அவர் பேட் செய்ய காலதாமதமாகி விட்டதாகவும், 'டைம்டு அவுட்'டின் படி விக்கெட் வீழந்ததாக அறிவிக்கும்படியும் வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசன் நடுவர்களிடம் முறையிட்டார். உலகக் கோப்பை போட்டி விதிமுறைப்படி ஒரு வீரர் 'அவுட்' ஆனால் அடுத்த பேட்ஸ்மேன் 2 நிமிடத்துக்குள் பேட்டிங் செய்ய தயாராக இருக்க வேண்டும். அந்த விதியை மேத்யூஸ் மீறி விட்டதாக கூறி நடுவர்கள் அவருக்கு 'அவுட் 'வழங்கினர்.
ஹெல்மெட் பிரச்சினையால் தான் உடனடியாக தன்னால் பேட்டிங் செய்ய இயலாமல் போய் விட்டது என்று மேத்யூஸ் சொன்னதை நடுவர்கள் ஏற்கவில்லை. வங்காளதேச கேப்டனும் அப்பீலை வாபஸ் பெற மறுத்து விட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் 'டைம்டு அவுட்' முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர் மேத்யூஸ் தான். மேத்யூசுக்கு அவுட் வழங்கியது சரி தான் என்று ஒரு தரப்பினரும், சரியில்லை என்று ஒரு சிலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் கிரிக்கெட் ஆட்டத்துக்கான விதிமுறையை வகுக்கும் மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) மேத்யூஸ் 'அவுட்' சர்ச்சை குறித்து நேற்று விளக்கம் அளித்துள்ளது. அதில், 'இலங்கை வீரர் மேத்யூசுக்கு நடுவர்கள் 'டைம்டு அவுட்' வழங்கிய தீர்ப்பு சரியானதாகும்.
ஹெல்மெட் வார் அறுந்தது குறித்து மேத்யூஸ் நடுவர்களுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. அது குறித்து அவர் நடுவர்களிடம் எதுவும் சொல்லாமல் மாற்று ஹெல்மெட் கொண்டு வரும்படி சக வீரர்களுக்கு சைகை காட்டியிருக்கிறார். நடந்ததை நடுவர்களிடம் விளக்கி அதனை சரி செய்ய நேரம் கேட்டு இருந்தால் அவர்கள் ஹெல்மெட்டை மாற்ற அனுமதித்திருக்கக்கூடும். அத்துடன் டைம்டு அவுட்டுக்கான சாத்தியக்கூற்றில் இருந்தும் தப்பித்து இருக்கலாம்.
பேட்டிங் செய்வதில் ஏற்பட்ட காலதாமத நேரத்தை நிறுத்தி வைக்கும்படி மேத்யூஸ் கேட்காததாலும், 2 நிமிடம் கடந்து விட்டதாக எதிரணியால் அப்பீல் செய்யப்பட்டதாலும் அவருக்கு நடுவர்கள் அவுட் வழங்கியது சரியானதாகும். நடுவர்கள் ஆட்ட விதிமுறையின்படியே நடவடிக்கை எடுத்துள்ளனர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்