என் மலர்
நீங்கள் தேடியது "சித்திரை சாவடி வாய்க்கால்"
- குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- இது குறித்து பேரூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் செங்கணம்பள்ளி ஆதிநாராயணன். இவர் பேரூர் அருகே உள்ள கோவை- சிறுவாணி ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது செங்கணம்பள்ளி ருசிக் (வயது 2).
சம்பவத்தன்று சிறுவன் வீட்டு முன்பு சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது அந்த வழியாக சென்ற சித்ரைசாவடி வாய்க்கால் அருகே சிறுவன் சென்றுள்ளான். வாய்க்கா லில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தண்ணீர் சென்று கொண்டு இருந்தது. அப்போது சிறுவன் சைக்கிளுடன் வா ய்க்காலில் தவறி விழுந்தான்.
குழந்தையை நீண்ட நேரமாக காணாததால் அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது சைக்கிள் வாய்க்காலில் மிதந்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அருகில் சென்று பார்த்த போது செங்கணம்பள்ளி ருசிக் நீரில் மூழ்கி மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் தங்களது குழந்தையை மீட்டு அந்த பகுதியில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோ தனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பேரூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.