என் மலர்
முகப்பு » slug 370135
நீங்கள் தேடியது "கால்சியம் மாத்திரைகள்"
- கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள், பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் மாத்திரைகள்
- விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
இரணியல் :
இரணியல் அருகே உள்ள கண்டன்விளை பகுதியில் இருந்து மணக்கரை வழியாக வில்லுக்குறி செல்லும் வழியில் இந்த ஆண்டு (2023) காலாவதியாகும் கால்சியம் மாத்திரைகள் பெட்டியோடு கேட்பாரற்று கிடந்தன.
தமிழ்நாடு அரசு இலவசமாக ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள், பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இந்த கால்சியம் மாத்திரைகள் குப்பைக்குள் கிடந்தது எப்படி என்று தெரியவில்லை.
கால்சியம் மாத்திரைகள் இவ்வாறு வீணடிக்கப் பட்டது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
×
X