search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையல் குறிப்புகள்"

    • தாளிக்கும் போது மிளகாய் வற்றல் கருகாமல் இருக்க தண்ணீரில் கழுவிட்டு பயன்படுத்தலாம்.
    • சாம்பார் கொதித்த பின்னரே காய்கறிகளை போடவேண்டும்.

    * ரவா உப்புமா அல்லது கிச்சடி செய்து அடுப்பிலிருந்து இறக்கும் முன் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு ஒருமுறை கிளறவும். வாசனையும் சுவையும் அற்புதமாக இருக்கும். தமிழ்நாட்டில் நாம் அதிகமாக தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதில்லை. ஒருமுறை முயற்சித்துப் பாருங்களேன்.

    * சாம்பார் சாதம் தயார் செய்த பின் 15-20 சுண்டைக் காய்களை நல்லெண்ணெயில் வறுத்து சாதத்தில் கலக்கவும். பிரமாத சுவையுடன் இருக்கும்.

    * புளியோதரை சாதம் செய்த பின், தனியா 2 ஸ்பூன், கடலைப்பருப்பு 1 ஸ்பூன், காய்ந்த மிளகாய் 6. வெந்தயம் 5 ஸ்பூன், வேர்க்கடலை 10 முதல் 12 வரை, சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றை லேசாக வாணலியில் வறுத்து பொடி செய்து சாதத்தில் கலக்கவும். அப்போது, தனிச்சுவையுடன் கூடிய புளியோதரை சாப்பிடலாம்.

    * தக்காளி தொக்கு செய்ய மிக்சியில் தக்காளியுடன் சிறிதுபுளி, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், சிறிது வெல்லம், இரண்டு ஸ்பூன் இட்லி மிளகாய்ப் பொடி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து அரைத்து செய்தால் சுவையோ சுவை.

    * கொத்தமல்லி, புளி, வெல்லம். இட்லி மிளகாய்ப் பொடி, பச்சை மிளகாய் அரைத்து, கடுகு தாளித்தால், தொட்டுக்கொள்ள ருசியான அவசர சட்னி ரெடி.

    * காலை செய்த பொரியல் மீதி இருந்தால் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்ப் பொடி, கரம் மசாலா சிறிது சேர்த்து பிசைந்துகொள்ளவும். மைதா மாவில் தோய்த்து, பிரட் தூளில் புரட்டி, எண்ணெயில் பொரித்து எடுத்தால், சுவையான கட்லட் தயார்.

    * சாம்பார் வைத்து அடுப்பில் இருந்து இறக்கும்போது, மிக்சியில் ஒன்றிரண்டாக பொடித்த தனியா தூளை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்குங்கள். சாம்பார் கமகமக்கும்.

    * பிரட் சாண்ட்விச் செய்யும்போது பட்டர், வெள்ளரி, கேரட் வைத்து, அதனுடன் ஏதேனும் முறுக்கு அல்லது மிக்சர் வைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

    * சாபூதானா கிச்சடி (ஜவ்வரிசி) செய்த பின், பொடித்த வேர்க்கடலையுடன் தனியா, காய்ந்த மிளகாய், பொட்டுக் கடலை வறுத்து பொடி செய்து போடவும். இப்போது சுவை அள்ளும்.

    *வீட்டில் தேங்காய் இல்லாவிட்டால், பொட்டுக்கடலை சிறிது, உப்பு, கொத்தமல்லி, சிறிது புளி சேர்த்து அரைத்து கடுகு தாளித்தால், திடீர் சட்னி தயாராகி விடும்.

    * தோசை மாவுடன் வறுத்த ரவாவை கலந்து சுட தோசை மொறு மொறுப்பாக இருக்கும்.

    * தாளிக்கும் போது மிளகாய் வற்றல் கருகாமல் இருக்க தண்ணீரில் கழுவி நன்றாக துணியில் துடைத்துவிட்டு கத்தரியால் நறுக்கிக் கொள்ளலாம்.

    * புளிக் குழம்பு, ரசம் போன்றவற்றிற்கு புளியை ஊற வைக்கும்போது உப்பையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும். அப்போது தான் சுவையும் நன்றாக இருக்கும்

    * காய்கறிகள் வாடிப்போய் இருந்தால் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து காய்கறிகளை சிறிது நேரம் ஊறவிட்டு எடுத்தால் பசுமையாக இருக்கும்.

    * இரவே உருளைக்கிழங்கை நறுக்கி வைக்க வேண்டுமா? எலுமிச்சை சாற்றில் கிழங்கு துண்டுகளைப்போட்டு பிரட்டி எடுத்து வைத்தால் கிழங்கு கறுத்துப்போகாமல் இருக்கும்.

    * முருங்கைக் கீரை தண்ணீர் சாறு வைக்கும் போது அரிசி களைந்த நீரில் அளவான உப்பிட்டு வெங்காயம் அரிந்து போட்டு தண்ணீர் கொதிவந்ததும் கீரையைப் போடவேண்டும். தாளிக்கும் போது மிளகாய் போட்டு சீரகத்தை நுணுக்கிப் போடவேண்டும். கடுகு போட வேண்டாம். நல்ல சுவை கிடைக்கும்.

    * சாம்பார் கொதித்த பின்னரே காய்கறிகளை போடவேண்டும். காய்கறிகள் வெந்ததும் புளி கரைசலில் கலந்து அதன் பிறகு தாளிக்கவேண்டும்.

    * அரிசியையும் பருப்பையும் வாசனை வரும் வரை வறுத்து, பின்னர் களைந்து போட்டு பொங்கல் செய்தால் சீக்கிரம் வெந்து விடுவதுடன் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரஷர் குக்கரை பயன்படுத்தினால் ரிவாயுவும் அதிகமாக விரயமாகாது.
    • எரிவாயுவை சிம்மில் வைத்து பயன்படுத்த வேண்டும்.

    இன்று பெரும்பாலானோர் சமையல் எரிவாயுவை பயன்படுத்தித்தான் சமையல் செய்கின்றனர். இந்தநிலையில் சில விஷயங்களைப் பின்பற்றினால், எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த முடியும்..

    * சமையல் வேலையை ஆரம்பிப்பதற்கு முன்பு சமையலுக்குத் தேவையான சமையல் பொருட்களை எரிவாயு அடுப்பின் அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பை எரியவிட்டு ஒவ்வொரு சமையல் பொருளையும் தேடிக் கொண்டிருந்தால் எரிவாயு வீணாகும் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

    * சமையல் வேலைகளுக்கு பிரஷர் குக்கரை பயன்படுத்தினால் ஒரே சமயத்தில் பருப்பையும், அரிசியையும் வேகவைத்து விடலாம். இதனால் எரிவாயுவும் அதிகமாக விரயமாகாது.

    * சமையல் பாத்திரங்களில் தண்ணீர் கொதிக்கத் தொடங்கியவுடன் தீப்பிழம்பை குறைத்து வைத்தால் எரிவாயு குறைவாக காலியாகும்.

    * உணவுப்பொருட்கள் வேக வைப்பதற்கு அதிக நேரம் தேவை என்றால், எரிவாயு அடுப்பை சிம்மில் வைத்து பயன்படுத்தினால் எரிவாயு அதிகம் காலியாகாது.

    அடுப்பு சரியாக எரியவில்லை என்று எரிவாயு வரும் பர்னரை குத்தி குத்தி பெரிது செய்தால், பிழம்பு சிவப்பாக எரியும், எரிவாயுவும் வீனனாகும்.

    • வடைக்கு மாவு அரைக்கும் போது உப்பை கடைசியாக சேர்க்க வேண்டும்.
    • தேங்காய் பர்பிக்கு தேங்காய் துருவலை வறுத்த பின்னர் பர்பி செய்தால் கெட்டியாக வரும்.

    * பயத்தம் மாவு உருண்டை செய்யும்போது வெல்லத்தை மிக்சியில் தூள் செய்து அத்துடன் வறுத்து சலித்த பயத்தம் மாவை போட்டு அரைத்தால் மாவு கட்டி இல்லாமல் இருக்கும்.

    * வடைக்கு உளுந்து அரைக்கும் போது கடைசியில்தான் உப்பு சேர்க்க வேண்டும். முன்பே சேர்த்தால் மாவு இளகிவிடும்.

    * ஒருவருக்கு மட்டும் காபி போட வேண்டும் என்றால் சிறிது சர்க்கரை கலந்த காபித்தூளை டீ வடிக்கட்டியில் போட்டு வெந்நீர் ஊற்றினால் கெட்டியான டிகாஷன் கிடைக்கும்.

    * சப்பாத்தியை சிறு துண்டுகளாக செய்து, அத்துடன் உருளைக்கிழங்கு குருமாவை சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    * உளுந்தம் பருப்பு அதிகமாகவும், கடலை பருப்பு கொஞ்சமாகவும் போட்டு மிளகாய், கெட்டி காயம், உப்பு சேர்த்து வறுத்து அரைத்தால் இட்லி பொடி நல்ல சுவையாக இருக்கும்.

    * சாம்பார் சாதம் செய்யும்போது அரிசி, பருப்பு, காய்கறி கலவை, சாம்பார் பொடி ஆகியவற்றை மட்டும் தண்ணீரில் வேக வைக்க வேண்டும். உப்பு, புளிக்கரைசலை தாளிக்கும் போது கொதிக்க வைத்து சேர்க்க வேண்டும். அப்போதுதான் சாதம் குழைவாக இருக்கும்.

    * அப்பம் செய்யும் போது அரிசி, தேங்காய் அரைத்த கலவையில் வெல்லத்தை தண்ணீரில் நன்றாக கரையவிட்டு ஆறிய பின்பு தான் ஊற்ற வேண்டும். சூடாக ஊற்றினால் அப்பம் சரியாக வராது.

    * தேங்காய் பர்பி செய்யும்போது தேங்காய் துருவலை ஈரப்பசை போக சிறிது வறுத்த பின்னர் பர்பி செய்தால் கெட்டியாக வரும்.

    * வாய் குறுகலான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் முளைக்கீரையை வைத்தால் அடுத்த நாள் கீரை பசுமை நிறம் மாறாமல், வதங்காமல் இருக்கும்.

    • பழ எசென்ஸ் விட்டு லட்டு பிடித்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
    • தேங்காய்க்கு பதில் கசகசாவை அரைத்து மோர்க்குழம்பு செய்தால் சுவையாக இருக்கும்.

    * இஞ்சியுடன் ஏலக்காயை சேர்த்து கொர கொரப்பாக அரைத்து ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். டீ தயாரிக்கும்போது கொதி வந்த பின்பு இதை ஒரு டீஸ்பூன் அளவிற்கு போட்டு பருகவும். டீ சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

    * மோர்க் குழம்பு செய்யும்போது தேங்காய்க்கு பதிலாக கசகசாவை சேர்த்து அரைத்து மோர்க்குழம்பு செய்தால் கெட்டியாக, சுவையாக இருக்கும்.

    * பொட்டுக்கடலை உருண்டை பிடிக்கும்போது வறுத்த வேர்க்கடலையையும், பொடித்த முந்திரியையும் சேர்த்துப் பிடித்தால் சுவையாக இருக்கும்.

    * லட்டு பிடிக்கும்போது ஏதாவது ஒரு பழ எசென்ஸ் விட்டுப் பிடித்தால் லட்டு சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

    * முட்டையை வேக வைக்கும் போது சில சமயங்களில் வெடிப்பு ஏற்பட்டு வெள்ளைக்கரு வெளியே வரக்கூடும். அப்படி வெளியில் வராமல் இருக்க வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வினிகரை சேர்க்கவும். இதனால் முட்டையின் ஓடு வெடித்தாலும் உள்ளே இருப்பவை வெளியில் வராது.

    * பூசணிக்காய் மீந்துவிட்டால் அதை நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால் அடுத்த நாள் வரை கெட்டு போகாமல் இருக்கும்.

    * முட்டை கெடாமல் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்கு, அந்த முட்டையை குளிர்ந்த உப்பு தண்ணீரில் மூழ்கும்படியாக வைக்கவும். முட்டையானது முழுகாமல் மேலே வந்தால் அந்த முட்டை கெட்டு விட்டது. அது தண்ணீரில் மூழ்கினால் அந்த முட்டையை சமைப்பதற்கு பயன்படுத்தலாம்.

    * ஒரு கப் அளவு பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து காய்கறி சாலட் செய்யும்போது சேர்த்துக் கொள்ளுங்கள். சுவை நன்றாக இருக்கும். உடல் நலத்திற்கும் ஏற்றது.

    * பச்சை மிளகாயில் உள்ள காம்பு பாகத்தை நீக்கி விட்டு அதை பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு பிரெஷ் ஆக இருக்கும்.

    * பிரியாணி செய்யும்போது ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டால் சாதம் உதிரி உதிராக இருக்கும்.

    • சமைக்கும் அனைவருக்கும் பிடித்த மாதிரி சமைக்க வேண்டும்.
    • சமையலில் அசத்த சில சூப்பரான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

    பொதுவாகவே சமைக்கும் அனைவருக்கும் பிடித்த மாதிரி சமைக்க வேண்டும் என்பது தான் இல்லத்தரசிகளின் பெரிய ஆசை. இதற்காக புதிய புதிய வகைகளில் சமையல்களை செய்வார்கள். அப்படி சமையலில் அசத்த சில சூப்பரான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம். சமையல் ருசியாக இருக்க கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான 10 குறிப்புகள் இதோ உங்களுக்காக...

    சமையலில் செய்யக்கூடாவதவை

    * ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

    * காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

    * மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

    * கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

    * காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

    * சூடாக இருக்கும் போது எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

    * தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

    * ஃபிரிட்ஜில் வாழைப்பழமும் உருளைக்கிழங்கும் வைக்கக்கூடாது.

    * பெருங்காயம் தாளிக்கும் போது எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

    * தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

    * குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

    * குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

    செய்ய வேண்டியவை..!

    * மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

    * புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

    * ஜவ்வரிசி வற்றலுக்கு அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

    * போளிக்கு மாவு கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

    *குருமாவை இறக்கும் போது கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

    * பச்சை கற்பூரம் டப்பாவில் நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

    * குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

    * வாழைப்பூவை முதல் நாள் இரவே நறுக்கி தண்ணீரில் போட வேண்டும்.

    * கடலை உருண்டைக்கு வெல்லப்பாகு முத்தின பாகாக இருக்க வேண்டும்.

    * வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய் மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

    • குளிக்கும்போது தயிரை உடலில் தேய்த்து குளித்தால் வேர்க்குரு மறைந்து விடும்.
    • வாழைப்பழத்தை ஒருபோதும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

    * குழம்பு வடகம் செய்யும்போது துவரம் பருப்பு, உளுந்தம் பருப்புடன் காராமணியும் சேர்த்து ஊறவைத்து அரைத்து விடுங்கள். அதை வடகமாக பொரித்தால் கர கரவென்று ருசியாக இருக்கும்.

    * சமையல் மேடையை நன்கு சுத்தம் செய்து அதில் கொத்தமல்லி தழைகளை பரப்பி, அகன்ற கிண்ணத்தால் மூடி வைத்து விடுங்கள். இரண்டு, மூன்று நாள்கள் பசுமையாக இருக்கும்.

    * ரசத்துக்கு தாளிக்கும் பொழுது சிறிது நெய்யில் கடுகுடன் 4, 5 முழு மிளகையும் சேர்த்து தாளித்தால் ரசம் மணத்துடன் இருக்கும்.

    * கிராம்பை தண்ணீரில் உரசி, முகப்பரு உள்ள இடத்தில் தடவினால் பரு மறைந்து விடும். மீண்டும் பரு வராது.

    * குளிக்கும்போது தயிரை உடலில் தேய்த்து குளித்தால் வேர்க்குரு மறைந்து விடும்.

    * வீட்டில் எந்த ஸ்வீட் செய்தாலும் அதில் சிறிது உப்பு கலந்தால் அதன் சுவை மேலும் கூடும்.

    * சப்பாத்தி அல்லது பூரிக்கு மாவு பிசைந்து, கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால், மேல் பரப்பு காய்ந்து போயிருக்கும். இப்படி நேராமல் இருக்க, மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி வைக்கலாம். அல்லது ஈரத்துணியால் மூடி வைக்கலாம்.

    * நெய்யில் சிறு கட்டி வெல்லத்தை போட்டு வைத்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் கெடாது.

    * வாழைப்பழத்தை ஒருபோதும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

    * வடைக்கு மாவு அரைக்கும்போது நீர் சிறிது அதிகமாகி விட்டால், ஒரு ஸ்பூன் நெய்யை அதில் விடவும். மாவு இறுகி விடும்.

    * அடுப்பில் வைத்திருக்கும் பால் பொங்கி வழியாமல் இருக்க, கடைகளில் விற்கும் எவர் சில்வர் கோலி உருண்டை (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பால்)களை வாங்கி பாலில் போட்டால் போதும். பால் பொங்கவே பொங்காது.

    * பத்து அல்லது பதினைந்து நெல்லை சுத்தமாக கழுவி விட்டு, காலையில் கறந்த பசும் பாலில் போட்டு வையுங்கள். இரவு வரைக்கும் பால் கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும்.

    * கத்தரிக்காய், வாழைக்காய் போன்ற காய்களை நறுக்கியவுடன் நீரில் போட்டு விடுங்கள். இல்லையெனில் அவற்றின் நிறம் மாறி விடும். நிறம் மாறினால் சுவை கெட்டு விடும்.

    • வெல்லம் பாகு காய்ச்சி இடியாப்பத்தில் ஊற்றி சாப்பிட ருசியாக இருக்கும்.
    • முருங்கைக்காயை பேப்பரை சுற்றி பிரிட்ஜில் வைத்தால்காயாது.

    * பீட்ரூட் துருவலுடன் வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி இடியாப்பத்தில் ஊற்றி சாப்பிட சத்துக்கு சத்து, சுவைக்கு சுவை. ருசியாகவும் இருக்கும்.

    * உளுந்து வடை செய்யும்போது மாவில் சிறிது சேமியாவை தூள் செய்து போட்டால் சுவையாக இருக்கும். மாவு அரைக்கும்போது சிறிது துவரம் பருப்பும் சேர்த்து அரைக்க வடை மிருதுவாக இருக்கும்.

    * முருங்கைக்காயை அப்படியே பிரிட்ஜில் வைத்தால் காய்ந்துவிடும். அதில் ஒரு பேப்பரை சுற்றி வைத்தால் காயாது.

    * பிரட் காய்ந்து போனால் இட்லி சட்டியில் வைத்து ஐந்து நிமிடம் வேகவிட்டு எடுக்க மிருதுவாகும்.

    * தோசைக்கு மாவு அரைக்கும்போது வெண்டைக்காய் கொஞ்சம் சேர்த்து அரைக்க தோசை பஞ்சு மாதிரி இருக்கும்.

    * எலுமிச்சை, நார்த்தங்காயில் ஊறுகாய் செய்யும்போது அவைகளில் உள்ள விதைகளை நீக்கிவிட்டால் ஊறுகாயில் கசப்பு இருக்காது.

    * சட்னியில் காரம் அதிகமாக இருந்தால் சிறிது தயிர் கலக்க காரம் போய்விடும். சுவையும் கூடும்.

    * கொத்தமல்லி துவையலுக்கு புளிக்கு பதிலாக தக்காளி சேர்க்க ருசியாக இருக்கும்.

    * பூண்டுவை கொஞ்ச நேரம் தண்ணீரில் போட்டால் உரிப்பதற்கு எளிதாக இருக்கும்.

    * தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்க்க சுவை கூடும்.

    * டீ தயாரிக்கும்போது ஆரஞ்சு பழத்தோலை சிறிது சேர்த்து கொதிக்க வைத்தால் டீ சுவையாக இருக்கும்.

    * காய்கறிகளை நறுக்கி உப்பு கலந்த நீரில் போட்டு வைத்திருந்து சமைக்க நிறம் மாறாது. உப்பு சேர்க்க வேண்டிய அவசியமும் இருக்காது.

    * சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து விட்டால் அதில் இரண்டு, மூன்று சொட்டு எலுமிச்சை சாறு சேர்க்க உதிரியாகி சுவையாக இருக்கும்.

    * தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்துக்கு பதில் கொள்ளு சேர்க்க தோசை மிருதுவாகிவிடும்.

    * இட்லி மாவு நீர்த்துப் போனால் எண்ணெய் இல்லாமல் வறுத்த ரவையை சேர்த்துவிட்டு பத்து நிமிடங்கள் கழித்து இட்லி சுட்டால் சுவையாகவும் இருக்கும்.

    * இடியாப்பத்திற்கு மாவு பிசையும்போது சிறிதளவு வெண்ணெய் சேர்த்தால் பிழிவது எளிதாகும். இடியாப்பமும் நல்ல பதத்துடன் வரும்.

    * சுண்டலை தாளித்த பிறகு சிறிதளவு கசகசாவை வறுத்து தூவ சுவை கூடும்.

    * கீரைகளை வேகவைக்கும்போது எலுமிச்சை பழ சாறை சிறிது விட்டால், கீரையின் நிறம் மாறாது. கீரை இலையும் ஒன்றுக்கொன்று ஒட்டாமல் இருக்கும். ருசியும் அமோகமாக இருக்கும்.

    * உப்பு சேமித்து வைத்திருக்கும் ஜாடியில் சிறிது அரிசியை துணியில் முடிச்சு போட்டு வைத்தால் உப்பு ஈரமாகாது.

    * காளான்களை அலுமினிய பாத்திரத்தில் சமைத்தால் பாத்திரம் கறுத்துவிடும்.

    * உருளைக்கிழங்கை வேக வைக்கும்போது உப்பை சேர்க்க, விரைவில் வேகும். வெடிப்பும் வராது.

    * பஜ்ஜி மாவை மிக்சியில் போட்டு லேசாக அரைத்துவிட்டு பஜ்ஜி செய்தால் மிருதுவாகவும், உப்பியும் இருக்கும்.

    * பிரிட்ஜில் பேக்கிங் சோடா டப்பாவை திறந்த நிலையில் வைத்தால் துர்நாற்றம் வராது.

    * பாத்திரங்களில் எண்ணெய் பிசுபிசுப்பு இருந்தால் சிறிது தயிர் ஊற்றி தேங்காய் நார் கொண்டு அழுத்தி தேய்த்தால் பிசுபிசுப்பு நீங்கிவிடும்.

    • சாப்பிட்ட பிறகு கற்கண்டை உண்டால் ஒவ்வாமை நீங்கும்.
    • கீரை சமைக்கும்போது சர்க்கரையை தூவினால் நிறம் மாறாமல் இருக்கும்.

    * மட்டன் பிரியாணி செய்யும்போது ஆட்டிறைச்சி துண்டுகளை சிறிது எலுமிச்சை சாறு கலந்து தயிரில் அரை மணி நேரம் ஊற வையுங்கள். பின்பு பிரியாணி செய்தால் வாடை இருந்தாலும் நீங்கி விடும். மென்மையாகவும், ருசியாகவும் இருக்கும்.

    * சாப்பிட்ட பின்பு வெள்ளை கற்கண்டை உட்கொண்டு வந்தால் ஒவ்வாமை நீங்கும். எளிதில் ஜீரணமாகும்.

    * உளுந்த வடைக்கு உளுந்தம் பருப்பு அரைக்கும்போது தண்ணீர் அதிகமாகிவிட்டால் சிறிது பச்சரிசி மாவை தூவினால் போதும். கெட்டித்தன்மையாகிவிடும்.

    * கீரை சமைக்கும்போது அதனுடன் ஒரு டீஸ்பூன் வெள்ளை சர்க்கரையை தூவினால் நிறம் மாறாமல் சூடாக, சுவையாக மென்மையாக இருக்கும்.

    * மலச்சிக்கல் பிரச்சினையை அதிகம் சந்திப்பவர்கள் அடிக்கடி உணவில் பப்பாளிக்காய் கூட்டு அல்லது பப்பாளிப்பழம் சாப்பிட்டு வரலாம். விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

    * மோர்க்குழம்பு மீந்துவிட்டால் பருப்பு வடைகளை துண்டுகளாக வெட்டிப்போட்டு பரிமாறலாம்.

    * தேங்காய் சட்னி மீந்து போனால் வீணாக்க வேண்டாம். அதனுடன் கோதுமை மாவு, மைதா மாவு, கடலை மாவு சேர்த்து பிசைந்து சப்பாத்திசுடலாம். மொறுமொறுவென்று ருசியாக இருக்கும்.

    * சமையல் மேடையில் அதிகமாக கரி படிவதை தடுக்க ஆங்காங்கே பேப்பர்களை தொங்க விடலாம்.

    * கை கழுவும் இடம் அல்லது பாத்திரங்களை தேய்க்கும் இடமான 'சிங்க்'கில் வாரம் ஒரு முறை உப்பு கலந்த வெந்நீரை ஊற்றி கழுவினால் துர்நாற்றம் நீங்கிவிடும்.

    * குழம்பு மீன், வறுத்த மீன் அதிகம் விரும்பி சாப்பிட்டால் அதனுடன் தயிர் சேர்த்துக்கொள்ளக்கூடாது. சீக்கிரம் செரிமானமாக நாட்டுச்சர்க்கரை அல்லது பழம் உட்கொள்ளலாம்.

    * கறிவேப்பிலை துவையல், புதினா ரசம் அல்லது துவையல், வல்லாரை கீரை துவையல் அல்லது ரசம் வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கிவிடும். ரத்தம் சுத்தமாகும்.

    • பாக்கு சேர்த்து வேகவைத்தால் இறைச்சி சீக்கிரம் வெந்துவிடும்.
    • புளிக்குழம்பிற்கு மிளகு, சீரகப்பொடி சேர்த்தால் ருசியாக இருக்கும்.

    * உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை கடலை மாவில் முக்கி எடுத்து எண்ணெய்யில் போட்டு பொரித்தால் வெஜிடபிள் போண்டா தயார். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு இது எளிய வழியாக இருக்கும்.

    * சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தமாக வைத்துக்கொள்ள பழைய தாள்களை கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

    * காபி டிகாஷன் போடுவதற்கு முன்பு சுடுதண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்தால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.

    * அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

    * வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் சேனைக்கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.

    * புளிக்குழம்பு வைக்கும் போது கடைசியில் மிளகு, சீரகம் அரைத்து பொடியை போட்டால் சுவையாக இருக்கும்.

    * இறைச்சியை வேக வைக்கும்போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.

    * எண்ணெய் பலகாரங்களை டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.

    * சீடை செய்யும்போது அதை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.

    * வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.

    * கிழங்குகளை சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைக்க வேண்டும். அப்படி செய்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

    * தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் கொஞ்சம் புளியை வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.

    • உருளைக்கிழங்கை மசித்து கலந்தால் வடை எண்ணெய் குடிக்காது.
    • தேங்காய் பால் ஊற்றிக் சர்க்கரை பொங்கல் செய்தால் சுவையாக இருக்கும்.

    1. ஏலக்காய் தூள் அரைக்கும்பொழுது ஏலக்காய் நமத்து போய்விட்டால் வெறும் வாணலியில் ஒரு நிமிடம் வதக்கி விட்டு பின்னர் அரைத்து பாருங்கள். நைசாக அரைபடும்.

    2. உளுந்து வடை செய்யும்போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால் வடை எண்ணெய் குடிக்காமல் மொறுமொறுவென்று ருசியாக இருக்கும்.

    3. சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

    4. பாயசத்திற்கு திராட்சைக்குப் பதிலாக பேரிச்சம் பழத்தை பொடிதாக நறுக்கி, நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

    5. ரவா தோசை செய்யும்போது 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென இருக்கும்.

    6. கனமில்லாத மெலிதான தோசைக்கல்லை சப்பாதிக்கும், அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும் பயன் படுத்த வேண்டும்.

    7. புளித்த மோர் வீட்டில் இருந்தால் சிறிதளவு வெண்டைக்காயில் சேர்த்து பொறியல் செய்தால், வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும்.

    8. கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்த பின்பு அதிக நேரம் வதக்க கூடாது. அது பச்சையாக இருந்தால் தான் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும்.

    9. புடலங்காய் கசப்பாக இருந்தால், அவை பாம்பு ஏறிய காய் என்பார்கள். ஆகவே சிறிது கிள்ளி சுவைத்து பார்த்து வாங்க வேண்டும்.

    10. அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது. தாது உப்புக்களும், வைட்டமின்களும் அருகம்புல்லில் அதிகம்.

    • வாழைத்தண்டை சாப்பிடும் நாட்களில் தயிர், மோரை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
    • கிழங்கு வகைகளை ரோஸ்ட் செய்யும்போது மிதமான சூட்டில் வதக்கவும்.

    * கிழங்கு வகைகளை ரோஸ்ட் செய்யும்போது அரிசி மாவு அல்லது ரவையில் உப்பு, காரம், பெருங்காயம் அல்லது மசாலா தூளை கலந்து வைக்கவும். கிழங்கை வேகவைத்து ரவை அல்லது அரிசி மாவில் நன்றாக தோய்த்து சிறிது நேரம் கழித்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வதக்கவும். சுவையாக இருக்கும்.

    * மிக்சியில் இட்லி, தோசை மாவு அரைத்தால் அரிசி மாவையும், உளுந்து மாவையும் தனித்தனியாக அரைத்து பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். அதை சூடு ஆறும் வரை குளிர்ந்த நீரில் வைக்கவும். பின்பு இரண்டு மாவையும் ஒன்றாக பாத்திரத்தில் கொட்டி உப்பு கலந்து வைத்தால் மறுநாள் இட்லி மென்மையாக இருக்கும்.

    * வெங்காய பக்கோடா தயாரிக்க வெங்காயத்தை துருவியது போல் சிறிதாக நறுக்கி உப்பு தூள் கலந்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்பு அதனுடன் கடலைமாவு, மசாலாப் பொடிகள் சேர்த்து பிசைந்து தண்ணீர் சேர்க்காமல் 2 ஸ்பூன் உருக்கிய நெய் மட்டும் விட்டு பிசைய வேண்டும். பின்பு எண்ணெய்யில் பொரித்தெடுத்தால் வெங்காய பக்கோடா ருசியாக இருக்கும்.

    * காய்ந்த பச்சை பட்டாணி அல்லது கொண்டைக்கட லையை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பாத்திரத்தை மூடி வைக்கவும். அரை மணி நேரத்தில் பட்டாணி, கடலை நன்றாக ஊறிவிடும். அதை சமையலுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். சமையல் ருசியாக இருக்கும்.

    * வாழைத்தண்டை சமைத்து சாப்பிடும் நாட்களில் தயிரையும், மோரையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    • சட்னி செய்யும் போது எள்ளை வறுத்து பொடித்து தூவினால் ருசி அதிகமாக இருக்கும்.
    • எண்ணெய் கொட்டினால் கோலமாவை போட்டு துடைத்தால் நீங்கி விடும்.

    * வெங்காய சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து தூவினால் ருசி அதிகமாக இருக்கும்.

    * துருபிடித்த தோசைக்கல், வாணலி உள்ளிட்ட துருபிடித்த பாத்திரத்தில் படிந்துள்ள கறைகளை நீக்க உருளைக்கிழங்கை பாதியாக வெட்டிக் கொள்ளவும். சிறிது உப்பு மற்றும் எண்ணெய்யை கலந்து அதில் உருளைக்கிழங்கை தோய்த்து, துருபிடித்த பாத்திரத்தை தேய்த்தால் பளிச்சென மாறிவிடும்.

    * சமையல் அறையில் கரப்பான் பூச்சி தொல்லையா? அந்த இடத்தில் கிராம்பை வைக்கலாம் அல்லது கிராம்பு எண்ணெய்யை சிறிது தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்யலாம். இதன் வாசனைக்கு கரப்பான் பூச்சி வராது. அடிக்கடி கிராம்பை மாற்ற வேண்டும்.

    * புதிதாக வாங்கிய மண் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சிறிது நேரம் வைத்து சூடேற்றிவிட்டு, பின் அதை கழுவினால் மண் வாசனை வராது. விரிசலும் ஏற்படாது

    * சாக்பீஸ்சை காடா துணியில் பொதிந்து வெள்ளிப்பொருள்கள் வைத்திருக்கும் இடத்தில் வைத்தால் அவை துரு பிடிக்காமலும், கருத்துப்போகாமலும் இருக்கும்.

    * அடைக்கு கடலைப்பருப்பை ஊறவைத்து அரிசி கலந்து அரைக்கும் போது வேகவைத்த உருளைக்கிழங்கு அல்லது மரவள்ளிக்கிழங்கை போட்டு அரைத்தால் அடை ருசியாக இருக்கும்.

    * சமையல் மேடையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன் மீது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கிவிடும்.

    * மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்சில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.

    * வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.

    * பாகற்காயை வில்லைகளாக நறுக்கி, எலுமிச்சை சாறில் சிறிது நேரம் ஊற வைத்து பொரியல் செய்தால் சுவையாக இருக்கும்.

    ×