search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    இந்தவார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...
    X

    இந்தவார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

    • சட்னி செய்யும் போது எள்ளை வறுத்து பொடித்து தூவினால் ருசி அதிகமாக இருக்கும்.
    • எண்ணெய் கொட்டினால் கோலமாவை போட்டு துடைத்தால் நீங்கி விடும்.

    * வெங்காய சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து தூவினால் ருசி அதிகமாக இருக்கும்.

    * துருபிடித்த தோசைக்கல், வாணலி உள்ளிட்ட துருபிடித்த பாத்திரத்தில் படிந்துள்ள கறைகளை நீக்க உருளைக்கிழங்கை பாதியாக வெட்டிக் கொள்ளவும். சிறிது உப்பு மற்றும் எண்ணெய்யை கலந்து அதில் உருளைக்கிழங்கை தோய்த்து, துருபிடித்த பாத்திரத்தை தேய்த்தால் பளிச்சென மாறிவிடும்.

    * சமையல் அறையில் கரப்பான் பூச்சி தொல்லையா? அந்த இடத்தில் கிராம்பை வைக்கலாம் அல்லது கிராம்பு எண்ணெய்யை சிறிது தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்யலாம். இதன் வாசனைக்கு கரப்பான் பூச்சி வராது. அடிக்கடி கிராம்பை மாற்ற வேண்டும்.

    * புதிதாக வாங்கிய மண் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சிறிது நேரம் வைத்து சூடேற்றிவிட்டு, பின் அதை கழுவினால் மண் வாசனை வராது. விரிசலும் ஏற்படாது

    * சாக்பீஸ்சை காடா துணியில் பொதிந்து வெள்ளிப்பொருள்கள் வைத்திருக்கும் இடத்தில் வைத்தால் அவை துரு பிடிக்காமலும், கருத்துப்போகாமலும் இருக்கும்.

    * அடைக்கு கடலைப்பருப்பை ஊறவைத்து அரிசி கலந்து அரைக்கும் போது வேகவைத்த உருளைக்கிழங்கு அல்லது மரவள்ளிக்கிழங்கை போட்டு அரைத்தால் அடை ருசியாக இருக்கும்.

    * சமையல் மேடையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன் மீது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கிவிடும்.

    * மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்சில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.

    * வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.

    * பாகற்காயை வில்லைகளாக நறுக்கி, எலுமிச்சை சாறில் சிறிது நேரம் ஊற வைத்து பொரியல் செய்தால் சுவையாக இருக்கும்.

    Next Story
    ×