search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக....
    X

    இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக....

    • குளிக்கும்போது தயிரை உடலில் தேய்த்து குளித்தால் வேர்க்குரு மறைந்து விடும்.
    • வாழைப்பழத்தை ஒருபோதும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

    * குழம்பு வடகம் செய்யும்போது துவரம் பருப்பு, உளுந்தம் பருப்புடன் காராமணியும் சேர்த்து ஊறவைத்து அரைத்து விடுங்கள். அதை வடகமாக பொரித்தால் கர கரவென்று ருசியாக இருக்கும்.

    * சமையல் மேடையை நன்கு சுத்தம் செய்து அதில் கொத்தமல்லி தழைகளை பரப்பி, அகன்ற கிண்ணத்தால் மூடி வைத்து விடுங்கள். இரண்டு, மூன்று நாள்கள் பசுமையாக இருக்கும்.

    * ரசத்துக்கு தாளிக்கும் பொழுது சிறிது நெய்யில் கடுகுடன் 4, 5 முழு மிளகையும் சேர்த்து தாளித்தால் ரசம் மணத்துடன் இருக்கும்.

    * கிராம்பை தண்ணீரில் உரசி, முகப்பரு உள்ள இடத்தில் தடவினால் பரு மறைந்து விடும். மீண்டும் பரு வராது.

    * குளிக்கும்போது தயிரை உடலில் தேய்த்து குளித்தால் வேர்க்குரு மறைந்து விடும்.

    * வீட்டில் எந்த ஸ்வீட் செய்தாலும் அதில் சிறிது உப்பு கலந்தால் அதன் சுவை மேலும் கூடும்.

    * சப்பாத்தி அல்லது பூரிக்கு மாவு பிசைந்து, கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால், மேல் பரப்பு காய்ந்து போயிருக்கும். இப்படி நேராமல் இருக்க, மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி வைக்கலாம். அல்லது ஈரத்துணியால் மூடி வைக்கலாம்.

    * நெய்யில் சிறு கட்டி வெல்லத்தை போட்டு வைத்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் கெடாது.

    * வாழைப்பழத்தை ஒருபோதும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

    * வடைக்கு மாவு அரைக்கும்போது நீர் சிறிது அதிகமாகி விட்டால், ஒரு ஸ்பூன் நெய்யை அதில் விடவும். மாவு இறுகி விடும்.

    * அடுப்பில் வைத்திருக்கும் பால் பொங்கி வழியாமல் இருக்க, கடைகளில் விற்கும் எவர் சில்வர் கோலி உருண்டை (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பால்)களை வாங்கி பாலில் போட்டால் போதும். பால் பொங்கவே பொங்காது.

    * பத்து அல்லது பதினைந்து நெல்லை சுத்தமாக கழுவி விட்டு, காலையில் கறந்த பசும் பாலில் போட்டு வையுங்கள். இரவு வரைக்கும் பால் கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும்.

    * கத்தரிக்காய், வாழைக்காய் போன்ற காய்களை நறுக்கியவுடன் நீரில் போட்டு விடுங்கள். இல்லையெனில் அவற்றின் நிறம் மாறி விடும். நிறம் மாறினால் சுவை கெட்டு விடும்.

    Next Story
    ×