என் மலர்
நீங்கள் தேடியது "விடுதி கட்டணம் உயர்வு"
- பக்தர்கள் கடும் அதிர்ச்சி
- உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 17-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்க உள்ளது. தினமும் இரவு, பகல் என 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதில் 26-ந் தேதி காலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
கார்த்திகை தீப திருவிழாவிற்காக தமிழகம் முழுவதிலும் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணா மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் திருவண்ணாமலை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி தீப தரிசனம் காண்பார்கள். இதனை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதி களில் 24, 25, 26-ந் தேதி களில் மட்டும் கட்டணம் பல மடங்கு உயர்த்த ப்பட்டுள்ளது.
சாதாரண நாட்களில் ஒரு அறைக்கு ரூ.1000 முதல் ரூ.3 ஆயிரம் அறைக்கு தகுந்தார் போல் கட்டண வசூல் செய்யப்படுகிறது. இதில் தீபத்திருவிழா முக்கிய விசேஷ நாட்களான 24, 25, 26 ஆகிய 3 நாட்களில் 10 முதல் 15 மடங்கு தங்கும் விடுதிகளுக்கு ஏற்றார் போல் விலையை உயர்த்தி கட்டணம் வசூலிக்கின்றனர்.
பக்தர்களும் வேறு வழியில்லாமல், கேட்கும் கட்டணத்தையும் கொடுத்து விட்டு தங்கும் நிலை உள்ளது. உதாரணமாக ரூ.1500-க்கு வழங்கும் ஒரு ஏ.சி. அறைக்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விடுதிகளுக்கு ஏற்றார் போல் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. கட்டணம் உயர்த்தப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.