என் மலர்
முகப்பு » அமிர்தகடேஸ்வரர் கோவில்
நீங்கள் தேடியது "அமிர்தகடேஸ்வரர் கோவில்"
- மழைநீர் மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது.
- வெள்ளநீர் சூழ்ந்ததால் பக்தர்கள் அவதிப்பட்டனர்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலங்களில் மழை நீர் உள் பிரகாரத்தை சுற்றி தேங்கி நிற்கும்.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பலத்த மழை பெய்து வருகிறது.
வழக்கமாக கோவில் வளாகத்தில் உள்ள மழை நீர் கோவில் பின் புறம் உள்ள தீர்த்தகுளத்தில் நிரம்பிய பிறகு மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்படும்.
கடந்த ஆண்டு கோவில் உள் பிரகாரத்தில் வெள்ளநீர் சூழ்ந்ததால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மழைநீர் கோவில் வளாகத்தில் தேங்காதவாறு கோவில் நிர்வாகிகள் மின் மோட்டார் மூலம் உடனுக்குடன் மழைநீரை வெளியேற்றும் பணியை தொடங்கியுள்ளனர்.
இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
×
X