என் மலர்
நீங்கள் தேடியது "அனுமதியில்லை"
- கோவில் பஸ்கள் மற்றும் படிக்கட்டு வழியாக பக்தர்கள் செல்ல அறிவுறுத்தல்
- சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் கோவில் நிர்வாகத்தினர் மும்முரம்
வடவள்ளி,
கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் 7-ம் படை வீடு என அன்போடு அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த கோவிலுக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் அதிகமானோர் வந்து செல்கிறார்கள்.
இந்த கோவிலில் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது கோவிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி தினமும் காலை, மாலை என 2 வேளைகளிலும் யாக சாலை வேள்வி பூஜை நடைபெற்று வருகி றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இன்று புதிதாக கட்டப்பட்டுள்ள அலங்கார மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி, சேச வாகனத்தில் ராஜ தர்பார் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி யளித்தார். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.
நாளை மறுநாள் சூரச சம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதனையொட்டி கோவிலுக்கு திரளான பக்தர்கள் வருவார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
கூட்டம் அதிகமாக வருவதை கருத்தில் கொண்டு, நாளையும், நாளை மறுநாளும் மட்டும் மலைப்பாதையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அன்றைய தினம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் பஸ்களிலும், படிக்கட்டு வழியாகவும் சென்று சாமியை தரிசிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவல் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.