என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மேலும் 7 வீடுகள்"
- ரப்பர் பால் உற்பத்தி பாதிப்பு
- மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தொடர் மழையின் காரண மாக குளுகுளு சீசன் நிலவு கிறது. மாவட்டம் முழுவதும் தினமும் மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக இரவு கனமழை கொட்டி தீர்த்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளில் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்து வருகிறது. சிற்றாறு 2-ல் அதிகபட்சமாக 59.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, கன்னிமார், மயிலாடி, நாகர்கோவில், இரணியல், ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.
திற்பரப்பு அருவி பகுதி யில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் கொட்டி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணைகள் நிரம்பி வரும் நிலையில் அணையின் நீர்மட்டத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார் கள். பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 43.74 அடியாக இருந்தது. அணைக்கு 544 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.62 அடியாக உள்ளது. அணைக்கு 315 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று கல்குளம் தாலுகாவில் மேலும் 7 வீடுகள் சேதமடைந் துள்ளது. தொடர் மழையின் காரணமாக குலசேகரம், கீரிப்பாறை, தடிக்காரன்கோ ணம் பகுதிகளில் ரப்பர் பால் உற்பத்தியும் பாதிக்கப் பட்டுள்ளது. சிரட்டைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களும் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிப்பாறை 51, பெருஞ்சாணி 22.8, சிற்றார் 1-47.8, சிற்றார் 2-59.4, பூதப்பாண்டி 6.2, களியல் 15, கன்னிமார் 3.2, மயிலாடி 3.2, நாகர்கோவில் 4.2, புத்தன் அணை 18.6, சுருளோடு 8.2, தக்கலை 36, இரணியல் 2, பாலமோர் 12.2, மாம்பழத்துறையாறு 41, திற்பரப்பு 37.9, அடையாமடை 5.1, ஆணைக் கிடங்கு 50.6.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்