search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெட்டல் டிடெக்டர்"

    • பக்தர்கள் சூட்கேஸ், கைப்பை கொண்டு செல்ல தடை
    • மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இந்த கோவில் நடை பக்தர்களின் தரிசனத்துக்காக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் நேற்று முதல் தொடங்கி உள்ளது.

    இதையடுத்து நேற்று முதல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை திறப்பு நேரம் கூடுத லாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 1 மணிக்கு அடைக்கப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப் படுகிறது.  சபரிமலை சீசன் தொடங்கிய நேற்று முதலே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. சீசன் தொடங்கிய 2-வது நாளான இன்றும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.

    இதனால் பகவதி அம்மன் கோவில் வெளி பிரகா ரத்தில் உள்ள கியூ செட்டில் பக்தர்களின் நீண்ட "கியூ" காணப்பட்டது. பக்தர்கள் சுமார் 1 மணி நேரம் "கியூ" வில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் "சூட்கேஸ்", கைப்பை மற்றும் பெட்டிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் கடுமையான சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இதேபோல கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவில், சுசீந்திரம் தாணு மாலயன் சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் போன்ற கோவில்களிலும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

    மேலும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்ப தற்காக படகு துறையில் அய்யயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இது தவிர கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், அரசு அருங்காட்சியகம், மியூசியம், மீன்காட்சி சாலை உள்பட அனைத்து இடங்களி லும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் கன்னியாகுமரியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பா டும் செய்யப்பட்டுள்ளது. சிப்ட் முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ×