என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறால் உற்பத்தியாளர்கள்"

    • திருப்பூண்டியில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • இறால் உற்பத்தியாளர்களுக்கு ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த திருப்பூண்டியில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு விவசாயிகளுக்கான"ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ்"கடல்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (எம்பிடா), தேசிய நிலையான நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமில் 100 மேற்பட்ட இறால் வளர்ப்போர் கலந்து கொண்டனர்.

    நீர்வாழ் உயிரின வளர்ப்பு விவசாயிகளுக்கு ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ்" பாதிப்புகள் மற்றும் இந்திய கடல் உணவு ஏற்றுமதியில் அதன் தாக்கம் குறித்து வல்லுனர்களைக் கொண்டு காணொளி வாயிலாக எடுத்துரைக்கப்பட்டது.

    இதில் கலந்து கொண்ட இறால் வளர்க்கும் விவசாயிகள் தமிழ்நாட்டில் அன்னிய செலாவணியை ஈட்டி தரும் தங்களுக்கு மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் மானியம் வழங்குவது போல் இறால் உற்பத்தியாளர்களுக்கும் டீசல் மற்றும் மின்சாரம் மானியமாக வழங்க வேண்டும்.

    இயற்கை பேரிடரில் இறால் உற்பத்தி செய்யும் விவசாயிகளையும் இணைக்க வேண்டும்.

    இறால் உற்பத்தியாளர்களுக்கு ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் எம்பிடா மண்டல துணை இயக்குநர் நரேஷ் விஷ்ணு தம்படா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்,

    அதனை தொடர்ந்து சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகண்ணன்,

    நாகை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜெயராஜ், நாகை மாவட்ட இறால் வளர்ப்போர் கூட்டமைப்பு தலைவர் சிதம்பரம் மற்றும் செயலாளர் சிவசங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×