என் மலர்
நீங்கள் தேடியது "குடிநீர் குழாயில் கழிவுநீர்"
- கலெக்டரிடம் புகார்
- சாலை சேறும் சகதியுமாக உள்ளது
கண்ணமங்கலம்:
கணணமங்கலம் அருகே காட்டுக்காநல்லூர் கிராமம் ஆரணி சட்டமன்ற தொகுதியில் மேற்கு ஆரணி ஒன்றியத்தை சேர்ந் தது. இந்த கிராமத்தின் மந்தைவெளி பகுதியில் மேல்வல்லம் செல்லும் சாலை பிரிகிறது. இச்சாலை பிரியும் இடத்தில் தனியார் திருமண மண்டபம் அருகே குடிநீர் குழாய் உடைந்து காணப்படுகிறது. இதனால் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலக்கிறது.
இந்த குடிநீர் துர்நாற்றம் வீசுவதால் யாரும்பயன்படுத்த முடியவில்லை. இதனை சீரமைக்க வேண்டும் என பலமுறை காட்டுக்காநல்லூர் ஊராட்சி மன்றத்தலைவர், மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் தற்போது பெய்த மழையால் இச்சாலை குண்டும் குழியுமாக சேறும் சகதியுமாக உள்ளது. கண்ணமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் 5 கிராம மக்கள் அவதிக்குள்ளானார்கள்.
எனவே உடைந்து போன குடிநீர் குழாயை பழுது பார்த்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அ.கணேசன் கலெக்டருக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.