என் மலர்
நீங்கள் தேடியது "பட்டியலினத்தவர்"
- பணியிடங்களை நிரப்பாமல் காலியாகவே வைத்திருப்பது சமூகநீதி பேசும் அரசுக்கு அழகல்ல.
- 10,400 பின்னடைவு பணியிடங்களையும் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசின் 34 துறைகளில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒடுக்கீடு செய்யப்பட்டு, தகுதியானவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக கிடக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னடைவுப் பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இரு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், இன்று வரை அவற்றில் ஒரே ஒரு பணியிடம் கூட நிரப்பப்படாதது கண்டிக்கத்தக்கது.
ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்களை நிரப்பாமல் காலியாகவே வைத்திருப்பது சமூகநீதி பேசும் அரசுக்கு அழகல்ல. தமிழக அரசு இனியாவது அதன் சமூகநீதிக் கடமைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றும் வகையில், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான 10,400 பின்னடைவு பணியிடங்களையும் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் 6 பேர் கைது.
- கைது செய்யப்பட்ட 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் நள்ளிரவில் நடந்த நிகழ்ச்சியில் வயர்களை திருடியதாக குற்றம்சாட்டி 12 வயது பட்டியலின சிறுவனை நிர்வாணப்படுத்தி நடனமாடச் சொல்லி காலணிகளால் தாக்கப்பட்ட கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ வைரலானது அடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தை சந்தித்து இது தொடர்பாக புகார் கொடுக்கும்படி போலீசார் வலியுறுத்தியுள்ளனர். பின்னர் சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷிட்டிஜ் குஜ்ஜர், யதாதி உபாத்யாய், ஆஷிஷ் உபாத்யாய், கௌரவ் சைனி, சந்தீப் சிங், அமர் சிங் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்
கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- தமிழகத்தில் அருந்ததியினருக்கு வழங்கப்பட 3 சதவீத இட ஒதுக்கீடும் இதில் அடங்கும்.
- உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன
பட்டியலின, பழங்குடியினத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை என்று கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. பட்டியலினத்தவரின் உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையிலிருந்து விலக்கப்படாத காரணத்தால் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் உள் ஒதுக்கீடு, அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவை மீறவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு, பஞ்சாப் அரியானா மாநிலங்களில் உள் ஒதுக்கீடு வழங்கியது தொடர்பான வழக்கில் 7 நீதிபதிகள் அமர்வில் 6 நீதிபதிகள் இந்த ஒருமித்த தீர்ப்பை வழங்கி இருந்தனர். தமிழகத்தில் அருந்ததியினருக்கு வழங்கப்பட 3 சதவீத இட ஒதுக்கீடும் இதில் அடங்கும் .எனவே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்தன.
ஆனால் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், பட்டியல் சாதியினருக்குள் பின்தங்கியுள்ளோருக்கு மாநில அரசு உள் ஒதுக்கீடு அளிப்பதில், எந்தத் தவறும் இல்லை இது மாநில அரசின் கொள்கை சார்ந்த ஒன்று என்று கூறி தனது தீர்ப்பை உறுதிப்படுத்தி மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.
- பட்டியலின தம்பதியின் வீட்டிற்கு சென்ற ராகுல் காந்தி அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி கேட்டறிந்தார்.
- இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார்.
மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் ஒரு பட்டியலின தம்பதியின் வீட்டிற்கு சென்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி கேட்டறிந்து அவர்களுடன் சேர்ந்து உணவு சமைக்க உதவி செய்து பின்னர் அவர்களுடன் சேர்ந்து உணவருந்தியுள்ளார்.
இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராகுல் காந்தி அவரது பதிவில், இன்றும் தலித் சமையலறை பற்றி வெகு சிலருக்கே தெரியும். ஷாஹு படோலே ஜி கூறியது போல், தலித்துகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள், எப்படி சமைக்கிறார்கள், அதன் சமூக மற்றும் அரசியல் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி, அஜய் துக்காராம் சனடே மற்றும் அஞ்சனா துக்காராம் சனடே ஆகியோருடன் ஒரு மதியம் செலவிட்டேன்.
மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு என்னை மிகுந்த மரியாதையுடன் அழைத்து, சமையலறையில் அவருக்கு உதவ எனக்கு அவர் வாய்ப்பு அளித்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து 'ஹர்பர்யாச்சி பாஜி', கொண்டைக்கடலை, கீரைகள் மற்றும் கத்திரிக்காயுடன் துவர் பருப்பு ஆகியவற்றைச் செய்தோம்.
படோல் ஜி மற்றும் சனடே குடும்பத்தின் சாதி மற்றும் பாகுபாடு பற்றிய தனிப்பட்ட அனுபவங்களைப் பற்றி பேசுகையில், தலித் உணவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை மற்றும் இந்த கலாச்சாரத்தின் ஆவணப்படுத்தலின் முக்கியத்துவம் பற்றி விவாதித்தோம்.
அரசியலமைப்பு சட்டம் பகுஜன்களுக்கு பங்கேற்பையும் உரிமைகளையும் வழங்குகிறது. அந்த அரசியலமைப்பை நாங்கள் பாதுகாப்போம். ஆனால், ஒவ்வொரு இந்தியனும் தன் இதயத்தில் சகோதரத்துவ உணர்வோடு முயற்சி செய்தால் மட்டுமே சமுதாயத்தில் அனைவரையும் உள்ளடக்கியும் சமத்துவம் சாத்தியமாகும்" என்று பதிவிட்டுள்ளார்.