என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உலக மீட்பர் ஆலயம்"
- 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் அசன உணவு வழங்கப்பட்டது.
- தேர்பவனி முக்கிய வீதிகளின் வழியாக சுற்றி வந்து ஆலயத்தை வந்தடைந்தது.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பழமை வாய்ந்த உலக மீட்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் மாலை சிறப்பு திருப்பலி, இறைமக்களுக்கு அசன உணவும் வழங்கப் பட்டது. நேற்று முன்தினம் நற் கருணை பவனி நடை பெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை பங்கு ஆலயத்தில் வெய்கா லிப்பட்டி புனித ஜோசப் கல்வியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி செயலர் அருட்பணி சகாய ஜான், பண்டாரகுளம் பங்குத் தந்தை அருட்பணி மிக்கேல் ஆகியோர் திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி னர்.
இதைதொடர்ந்து திருத்தேர் அர்ச்சிக்கப்பட்டது. உலக மீட்பர் திரு உருவ தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர்பவனி ஆலங் குளம்-தென்காசி சாலை வழியாக அண்ணாநகர் மற்றும் ஆலங் குளத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சுற்றி வந்து ஆலயத்தை வந்தடைந்தது. தேர் பவனியில் இறைமக்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஆலங்குளம் உலக மீட்பர் ஆலயம் பங்குத்தந்தை அருட்பணி எஸ்.எம்.அருள் ராஜ் மற்றும் வின்சென்ட் தே பவுல் சபை இறை மக்கள் செய்திருந்தனர்.