என் மலர்
நீங்கள் தேடியது "இன்போசிஸ் நிறுவனர்"
- உங்களில் பெரும்பாலானவர்கள் பட்டினியை அனுபவித்து இருக்கமாட்டீர்கள்.
- 50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் மற்றவர்கள் கார்களில் ‘லிப்ட்’ கேட்டே பயணித்துக்கொண்டு இருந்தேன்.
நியூயார்க்:
ஐ.நா.வில் இந்திய தூதரகம் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல தொழிலதிபரும், இன்போசிஸ் நிறுவனருமான நாராயணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், 'உங்களில் பெரும்பாலானவர்கள் பட்டினியை அனுபவித்து இருக்கமாட்டீர்கள். ஆனால் நான் அனுபவித்து இருக்கிறேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் மற்றவர்கள் கார்களில் 'லிப்ட்' கேட்டே பயணித்துக்கொண்டு இருந்தேன். அப்போது பல்கேரியாவுக்கும் இன்றைய செர்பியாவுக்கும் இடையே உள்ள நிஷ் என்ற பகுதியில் 120 மணி நேரம் (5 நாட்கள்) பட்டினி கிடந்தேன்' என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் நிபுணர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- இளைஞர்கள் தற்போது இருப்பதை விட கூடுதல் நேரமாக, வாரத்திற்கு 70 மணி நேரம் பணிப்புரிய வேண்டும்.
- இந்தியா போன்ற ஒரு ஏழை நாட்டை வளமான நாடாக மாற்றுவதற்கு முதலாளித்துவம் மட்டுமே ஒரே தீர்வு.
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனம் இன்ஃபோசிஸ். இதன் இணை நிறுவனர்களில் ஒருவர் நாராயண மூர்த்தி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர்கள் தற்போது இருப்பதை விட கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும். வாரத்திற்கு 70 மணி நேரம் பணிப்புரிய வேண்டும் என்று தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், "அரசு எதையும் இலவசமாக வழங்கக்கூடாது; அரசால் வழங்கப்படும் சேவை, மானியங்களை பெறுபவர்கள் சமூக முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும்" என்று இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் நடத்திய "ஃபையர்சைட் சாட்" நிகழ்ச்சியின்போது இலவச சேவைகள் குறித்து நாராயண மூர்த்தி பேசுகையில், " எந்த வகையான பொருட்களையும் சேவைகளையும் இலவசமாக வழங்குவது பற்றி பேசுகையில், நான் இலவச சேவைகளுக்கு எதிரானவன் அல்ல, ஆனால் அரசு வழங்கும் சேவைகள் மற்றும் மானியங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் மக்கள், தனது குடும்பத்தின் நாட்டின், சமூகத்தின் நலனுக்கு பங்களிக்க வேண்டும். நீங்கள் அந்த சேவைகளைப் பெறும்போது, அந்த மானியங்களைப் பெறும்போது, அதற்குப் பதிலாக நீங்கள் எதையாவது செய்யத் தயாராக இருக்க வேண்டும். இந்தியா போன்ற ஒரு ஏழை நாட்டை வளமான நாடாக மாற்றுவதற்கு முதலாளித்துவம் மட்டுமே ஒரே தீர்வு" என்று கூறினார்.