என் மலர்
நீங்கள் தேடியது "அம்பேத்கர் நினைவு தினம்"
- புரட்சியாளர் அம்பேத்கருக்குப் புரட்சி வணக்கம்.
- தனது பேரறிவால் சமத்துவத்துக்கும் நீதிக்கும் பாதை சமைத்தவர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
"கற்பி-புரட்சி செய்-ஒன்றுசேர்" பெரும்பாலான மக்களின் உரிமைகளையும்-கண்ணியத்தையும் மறுத்த, இந்தச் சமுதாயத்தில் வேரூன்றிய சமூக அநீதிகளுக்கு எதிராக நம்மிலிருந்து உருவாகி எதிர்த்த புரட்சியாளர் அம்பேத்கருக்குப் புரட்சி வணக்கம்.
கல்வியின் மகத்துவத்தை உணர்த்தி, தனது பேரறிவால் சமத்துவத்துக்கும் நீதிக்கும் பாதை சமைத்தவர் அவர்.
தனது சிந்தனைகளால் நமக்கு உரமூட்டி-நம்மைப் பாதுகாக்கும் புரட்சியாளர் அம்பேத்கர் நம்முடைய வாளாகவும் கேடயமாகவும் என்றென்றும் வாழ்கிறார். அண்ணலின் அறிவொளியில் சமத்துவச் சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.
- சுமூக நிலை ஏற்படாத நிலையில் போலீசார் மேலும் குவிக்கப்பட்டுள்ளனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அருகே உள்ள வாடமங்கலம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பகுதி மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் வீட்டு மனை மற்றும் வீடு கட்டி கொடுத்த நிலையில் அப்பகுதியில் கிராம மக்கள் குடியிருந்து வருகின்றனர். இதில் அப்பகுதி மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு நிலம் கொடுத்தவரின் வாரிசுதாரர்கள் இது எங்களுக்கு சொந்தமான இடம் என கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
மேலும் இதுகுறித்து இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் இன்று டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை கிராம மக்கள் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
அப்போது அங்கு வந்த ஒரு தரப்பினர் இந்த இடம் எங்களுக்கு சொந்தம் என்றும், இதில் யாருடைய புகைப்படத்திற்கும் மாலை அணிவிக்க கூடாது என்று கூறி சிலர் திடீரென்று தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இது குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா, பர்கூர் டி.எஸ்.பி. முத்துகிருஷ்ணன், பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் ஆகியோர் கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் சுமூக நிலை ஏற்படாத நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மேலும் குவிக்கப்பட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் வாடமங்கலம் கிராமத்தில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- தமிழக அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
- தமிழக அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விக்கிரவாண்டியில் விஜய் பேசியது அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஜெயங்கொண்டம்:
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 10-க்கும் மேற்பட்ட உயிர்களும், ஏராளமான கால்நடைகளும், விவசாய பயிர்களும் அழிந்துள்ளன.
இதற்காக தமிழ்நாடு அரசு ரூ. 2 ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அண்டை மாநிலமான புதுச்சேரியில் ரேஷன் கார்டுக்கு ரூ.5 ஆயிரம் வழங்குவதாக அறிவித்து உள்ளனர்.
ஆகவே தமிழ்நாடு அரசும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என கூறினார். இந்த வெள்ள நிவாரணப் பணிகளில் ராணுவம் போல போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க என்னை ஒரு மாதத்திற்கு முன்பாகவே அழைத்திருந்தார்கள்.
இருந்தபோதிலும் நான் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான விளக்கத்தை தெரிவித்துள்ளேன். புத்தக வெளியீட்டாளர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
விக்கிரவாண்டியில் விஜய் பேசியது தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு அரசியல் சாயம் பூசியதால் சிக்கல் எழுந்தது.
நானும் அந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றால் அரசியல் சாயம் பூசப்படும். விஜய் மட்டும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கட்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தோம். விஜய்க்கும் எங்களுக்கும் எந்த சிக்கலும் இல்லை, முரண்பாடும் இல்லை.
ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து தி.மு.க. அரசுக்கு எதிராக பேசி வருவது அவரது தனிப்பட்ட கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
- மும்பையில் அம்பேத்கரின் நினைவிடம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
- 350 அடி உயரத்தில் அவரது வெண்கலச் சிலை நிறுவப்படுகிறது.
சென்னை:
அம்பேத்கர் நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுவதை யொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மும்பையில் உள்ள சைத்யபூமி எனும் சட்ட மேதை அம்பேத்கரின் நினைவிடம் பல ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அங்கு 350 அடி உயரத்தில் அவரது வெண்கலச் சிலை நிறுவப்படுகிறது.
இத்துடன் அவரது பெருவாழ்வை விவரிக்கும் கண்காட்சியகம், ஆராய்ச்சி மாணவர்களுக்கான நூலகம், கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான தொழில்நுட்ப ஆய்வகம் உள்ளிட்டவை கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இதை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் திறந்து வைக்க உள்ளார்.
அரசமைப்பு சட்டம் மற்றும் 'புத்தமும் அவரது தம்மமும்' என்ற நூல் ஆகிய இரண்டும் அம்பேத்கர் எனும் பேராற்றலின் பெருங்கொடைகள். இவை தீயவற்றை எரிக்கும் தூயவை. ஜனநாயக அறத்தை காக்கும் பேரரண். இந்த இரண்டையும் குறிவைத்துள்ள சனாதனத்தை அடையாளம் கண்டு, அதை முறியடிக்க அவரது நினைவு தினத்தில் உறுதியேற்போம். அவரது ஞான பேராயுதங்களை ஏந்துவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இந்திய மண்ணில் மக்களைப் பிறப்பால் பிளவுபடுத்தி, சாதிப் பிரிவினையால் ஒடுக்கும் கொடுமைகளுக்கான மூல காரணங்களை எதிர்த்து புரட்சி செய்தவர்.
- உண்மையான பிரிவினை எது என்பதை எடுத்துச்சொல்லி, சட்டத்தின் வழியாக மக்களைச் சமமாக்கப் போராடிய புத்துலக புத்தர்.
சென்னை:
அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்திய மண்ணில் மக்களைப் பிறப்பால் பிளவுபடுத்தி, சாதிப் பிரிவினையால் ஒடுக்கும் கொடுமைகளுக்கான மூல காரணங்களை எதிர்த்து புரட்சி செய்தவர்.
உண்மையான பிரிவினை எது என்பதை எடுத்துச்சொல்லி, சட்டத்தின் வழியாக மக்களைச் சமமாக்கப் போராடிய புத்துலக புத்தர்.
அறிவுப் பேரொளி அம்பேத்கரைப் போற்றுவோம். எத்தகைய இடர்களும் சூழ்ச்சிகளும் வந்தாலும், சமத்துவத்தை நோக்கிச் சளைக்காமல் உழைக்கப் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் உறுதியேற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை மக்கள் மிகவும் துயரத்தில் உள்ளனர்.
- அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அனைத்திலும் தண்ணீர் நிற்கிறது.
திண்டிவனம்:
அம்பேத்கரின் நினைவுதினத்தை முன்னிட்டு பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ், திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட செயலாளர் ஜெயராஜ். நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:-
சென்னையில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னுடைய அனுதாபங்கள். இன்னும் ஒரு நாள் சென்னையில் மழை பெய்தால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு சென்னை பாதிக்கப்பட்டிருக்கும். சென்னை மக்கள் மிகவும் துயரத்தில் உள்ளனர். இது சம்பந்தமாக விரிவான அறிக்கை ஒன்றை நான் கொடுத்திருக்கிறேன்.
அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அனைத்திலும் தண்ணீர் நிற்கிறது. செலவு செய்யப்பட்ட பணம் அனைத்தும் பாதாளத்தில் விடப்பட்டுள்ளதா? ஒன்றுமே தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.