என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்"

    • அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹெலிகாப்டரில் பாதிப்புகளை பார்வையிட உள்ளார்.
    • மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்.

    மிக்சாங் புயல் எதிரொலியால் சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்து வீடுகளுக்குள்ளும் புகுந்தது.

    குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை இரவும் திங்கட்கிழமையும் இடைவிடாமல் 30 மணி நேரத்துக்கு மேல் அடைமழை பெய்ததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    புயலுக்கு பிறகு தமிழக அரசு தரப்பில் மீட்பு பணிகள் ஒரு புறம் துரிதமாக நடைபெற்று வந்தாலும், இன்னும் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது.

    மின் வெட்டு, உணவு கிடைக்காமலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார்.

    மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஹெலிகாப்டரில் பாதிப்புகளை பார்வையிடுகின்றனர்.

    மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ராஜ்நாத் சிங் சந்திக்க உள்ளார்.

    • லட்சத்தீவு கடற்படையால் கைதான தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் 10 பேரை மீட்க கோரிக்கை.
    • குஜராத் அருகே காணாமல் போன மீனவர் அண்ணாதுரையையும் மீட்க நடவடிக்கை.

    திமுக எம்.பி கனிமொழி இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து பேசினார்.

    அப்போது, லட்சத்தீவு கடற்படையால் கைதான தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் 10 பேரையும், குஜராத் அருகே காணாமல் போன மீனவர் அண்ணாதுரையையும் மீட்க நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினார்.

    இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கனிமொழி கடிதம் ஒன்றை வழங்கிானர்.

    இதுகுறித்து, கனிமொழி எம்.பி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கடலோர காவல்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்கவும், குஜராத் போர்பந்தர் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது காணாமல் போன தூத்துக்குடி அயன்பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் அண்ணாதுரையை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துக் கேட்டுக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதியும் பங்கேற்க உள்ளார்.
    • இந்தியா-ரஷியா இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

    மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக நாளை ரஷியா செல்கிறார்.

    ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போர்க்கப்பல் 'ஐ.என்.எஸ். துஷில்' இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் திங்கள் அன்று கலினின்கிராட்டில் நடைபெற உள்ளது. இதில் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதியும் பங்கேற்க உள்ளார். உலக அளவில் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட போர்க்கப்பல்களில் ஒன்றாக கருதப்படும் 'ஐ.என்.எஸ். துஷில்' போர்க்கப்பல், இந்திய பெருங்கடலில் இந்திய கடற்படையின் செயல்பாட்டுத் திறனை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தனது ரஷிய சுற்றுப்பயணத்தின்போது ராஜ்நாத் சிங், மாஸ்கோவில் வரும் 10-ந்தேதி நடைபெற உள்ள இந்தியா-ரஷ்யா அரசு ஆணையத்தின் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 21-வது கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 5 மாதங்களுக்கு பிரதமர் மோடி ரஷியாவிற்கு பயணம் செய்து அந்நாட்டின் அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில், இந்தியா-ரஷியா இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×