search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாலட்சுமி திட்டம்"

    • பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
    • காந்திலால் பூரியாவின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்.

    மத்தியபிரதேச மாநிலம் ரத்லம் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக காந்திலால் பூரியா போட்டியிடுகிறார்.

    இவர் அங்கு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும். ஒவ்வொரு பெண்கள் வங்கி கணக்கிலும் இந்த பணம் நேரடியாக வரவு வைக்கப்படும். இது காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    2 மனைவிகள் உள்ளவர்களுக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

    இந்த பேச்சுக்கு தொண்டர்கள் மத்தியில் பலத்த கரகோஷமும் எழுந்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் திக் விஜய் சிங், மற்றும் ஜிது பட்வாரி முன்னிலையில் காந்திலால் பூரியா இந்த கருத்தை தெரிவித்தார்.

    இதனை ஆதரிப்பது போல மாநில தலைவர் ஜிது பட்வாரி பேசும் போது இரண்டு மனைவிகள் உள்ளவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படுவதாக காந்திலால் பூரியா கூறியது ஒரு அற்புதமான அறிவிப்பு என கூறினார்.

    இந்நிலையில், காந்திலால் பூரியாவின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பாஜா எம்.பி. மாயா நரோலியா கூறும்போது, "காங்கிரஸ் தலைவர்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அறிக்கைகள் விடுத்து வருகின்றனர்.

    காந்திலால் பூரியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு கொடுக்க இருக்கிறோம். அவரின் இந்த பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

    இதற்கு பாராளுமன்ற தேர்தலில்பெண் வாக்காளர்கள் காங்கிரசுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்று தெரிவித்தார்.

    • நூறு நாள் வேலைத் திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது மோடி அந்த திட்டத்தை நிறுத்த நினைக்கிறார்.
    • மோடி அரசானது பணக்காரர்களுக்கான அதானி, அம்பானி அரசாக உள்ளது.

    விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் இன்று அருப்புக் கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குள்பட்ட சூலக்கரை, சின்னவள்ளி குளம், மாசி நாயக்கன்பட்டி குல்லூர் சந்தை, ராமசாமிபுரம் பால வநத்தம், கோவிலாங்குளம், பாளையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் தேர்தல் முடிந்ததும் மனு செய்தால், உடனடியாக வழங்கப்படும். நூறு நாள் வேலைத் திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது மோடி அந்த திட்டத்தை நிறுத்த நினைக்கிறார் . இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நூறு நாள் வேலை 150 நாட்களாகவும், சம்பளத்தை 400 ஆக உயர்ததவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பேசுகையில், இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன், மகளிருக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும்.

    இதன் மூலம் அவர்களின் குடும்ப வாழ்வு வளம் பெறும். மோடி அரசானது பணக்காரர்களுக்கான அதானி, அம்பானி அரசாக உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் எனப் பேசினார். பிராசரத்தில் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும், தெலுங்கானா மாநில எல்லைக்குள் இலவசமாக பயணிக்கலாம்.
    • தெலுங்கானாவில் வசிக்கும் பெண்கள் மட்டுமே இந்த சேவையைப் பெற தகுதியுடையவர்கள்.

    திருப்பதி:

    தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் அரசு பஸ்களில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 உரிமைத்தொகை உள்ளிட்ட 6 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

    தற்போது காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ரேவேந்த் ரெட்டி முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார். சோனியா காந்தி பிறந்தநாளான இன்று பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான மகாலட்சுமி இலவச பஸ் திட்டத்தை முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து பெண்களுக்கான இலவச பஸ் பயணம் உடனடியாக மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

    இலவச பயண திட்டத்திற்கான விதிமுறைகளும், நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    சிட்டி ஆர்டினரி, எக்ஸ்பிரஸ், மெட்ரோ எக்ஸ்பிரஸ், பல்லே வெலுகு என அரசின் அனைத்து வகை பஸ்களிலும் இந்த பெண்களுக்கான இலவச பயண திட்டம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும், தெலுங்கானா மாநில எல்லைக்குள் இலவசமாக பயணிக்கலாம். மாநிலங்களுக்கு இடையேயான பஸ்களில் பயணிக்கும்போது, தெலுங்கானா மாநில எல்லை வரை இலவசம், அதன் பிறகு உள்ள தொலைவுக்கு பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

    தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து பெண்களும், 3-ம் பாலினத்தவரும் வயது வித்தியாசம் இன்றி, இந்த திட்டத்தில் பயன் பெறலாம். தெலுங்கானாவில் வசிக்கும் பெண்கள் மட்டுமே இந்த சேவையைப் பெற தகுதியுடையவர்கள்.

    இலவச பயணம் மேற்கொள்ள விரும்பும் பெண்கள் தங்களுடைய வசிப்பிட முகவரியை உறுதிப்படுத்தும் வகையிலான அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு 'ஜீரோ டிக்கெட்' வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×