என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளி பேருந்து"
- 18 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி.
- விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே தனியார் ப ள்ளி பேருந்தில் எடுத்து சென்ற ஆசிட் பாட்டில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.
இதில், 18 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கழிப்பறை சுத்தம் செய்வதற்காக ஆசிட் எடுத்து சென்றபோது வெடித்து சிதறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
- பாக்யஸ்ரீ (34) என்ற பெண் தனது மகனை பள்ளி பேருந்தில் ஏற்றிவிட முயன்றுள்ளார்.
- பாக்யஸ்ரீயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கர்நாடகாவில் தனது ஊனமுற்ற மகனை பள்ளிப் பேருந்தில் ஏற்றுவதற்கு உதவியபோது, தாயும் மகனும் மின்சாரம் தாக்கி துடிதுடித்த அதிர்ச்சி சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கல்புர்கி மாவட்டத்தில் பாக்யஸ்ரீ (34) என்ற பெண் தனது மகனை பள்ளி பேருந்தில் ஏற்றிவிட முயன்றுள்ளார். அப்போது பள்ளி பேருந்தின் மீது ஏற்கனேவே அறுந்து விழுந்த மின்சார கம்பி பட்டுள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி பாக்யஸ்ரீ துடிதுடித்தார்.
பின்னர் ஓட்டுநர் பேருந்தை முன்னோக்கி நகர்த்தினார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்த பெண்ணையும் அவரது மகனையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பாக்யஸ்ரீயின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவரது மகனின் உடல்நிலை அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இது சம்பவம் குறித்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் மின்சாரத்துறையினர் மீது போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
- பேருந்து சீட் பிடிப்பதில் 2 மாணவர்களுக்கு இடையே சண்டை வந்துள்ளது.
- பேருந்தில் மாணவர்கள் இருவர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள விஸ்டம் மெட்ரிக் பள்ளியில் படிக்கும் 9ஆம் வகுப்பு மாணவர்கல் நேற்று பள்ளி முடிந்து பள்ளி பேருந்தில் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது சீட் பிடிப்பதில் 2 மாணவர்களுக்கு இடையே சண்டை வந்துள்ளது. இதனால் மாணவர்கள் இருவர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலின் போது மயங்கி விழுந்த மாணவன் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.