என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பள்ளி பேருந்து விபத்து"
- பயணிகள் யாரும் உயிரிழந்தார்களா என்பதை போலீசார் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.
- விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தாய்லாந்தில் சுமார் 44 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சென்ற பள்ளி பேருந்து ஒன்று பாங்காக் புறநகர் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மத்திய உதாய் தானி மாகாணத்தில் இருந்து பள்ளிப் பயணத்திற்காக 44 பேரை ஏற்றிக்கொண்டு அயுத்தாயாவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து தலைநகரின் வடக்குப் புறநகர் பகுதியான பத்தும் தானி மாகாணத்தில் சென்று கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த தீவிபத்தில் இருந்து 16 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக உள்துறை அமைச்சர் கவலை தெரிவித்துள்ளார். எனினும் பயணிகள் யாரும் உயிரிழந்தார்களா என்பதை போலீசார் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- பஸ்சின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.
- பஸ்சில் இருந்த மாணவர்களில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
சூலூர்:
கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களை அழைத்து வருவதற்காக பள்ளி நிர்வாகம் சார்பில் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நடுபாளையம், பீடம்பள்ளி, பாப்பம்பட்டி பகுதிகளில் உள்ள மாணவர்களை அழைத்து வருவதற்காக பஸ் ஒன்று சென்றது.
பஸ்சை கார்த்திக் என்பவர் ஓட்டினார். நடுப்பாளையம், பீடம்பள்ளி, பாப்பம்பட்டி பகுதிகளில் உள்ள மாணவர்களை ஏற்றி விட்டு, பட்டணம் ஜே.ஜே.நகர் பகுதியில் உள்ள மாணவர்களை ஏற்றுவதற்காக கார்த்திக் பஸ்சை அங்கு ஓட்டி சென்றார்.
அப்போது ஜே.ஜே.நகர் பகுதி அருகே சென்ற போது, எதிரே மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தது. சாலையின் ஒரு புறத்தில் பள்ளம் இருந்ததால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர், வேனில் மீது மோதுவது போல் வந்ததாக தெரிகிறது.
இதனை பார்த்ததும் அதிர்ச்சியான பஸ் டிரைவர் கார்த்திக், மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ்சை திருப்பினார். அப்போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சாலையின் ஒரத்தில் இருந்த 12 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்சின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் கார்த்திக் மற்றும் பஸ்சில் இருந்த மாணவர்களில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
பஸ் விபத்துக்குள்ளானதை அறிந்ததும், ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் விரைந்து வந்து பஸ்சில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, பள்ளத்தில் இருந்த பஸ்சை கிரேன் உதவியுடன் மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். தொடர்ந்து விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, கடந்த 9 வருடமாகவே இந்த சாலை இப்படி தான் உள்ளது. இதனை சீரமைத்து தருமாறு கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைக்காலத்தில் இந்த சாலை வழியாக செல்ல முடியாத நிலையே உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க சாலையை சீரமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாதிக்கப்பட்ட 22 மாணவர்களையும் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தது.
- கிளினர் ராஜவேல் மீது வழக்குப் பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ், விஜயபுரத்தில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை புறப்பட்டது. பஸ்சினை ஈரியூரை சேர்ந்த கோவிந்தன் (வயது 47) ஓட்டி வந்தார். அந்த பஸ்சில் பள்ளியின் பாத்ரூமை கழுவ 2 லிட்டர் ஆசிட் வாங்கி வைக்கப்பட்டிருந்தது.
பஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஆசிட் பாட்டில் சாய்ந்து விழுந்து, ஆசிட் கொட்டியது. இதனால் பஸ் முழுவதும் கடும் நெடியுடன் துர்நாற்றம் வீசியது. இதில் மாணவர்களுக்கு மூச்சுதிணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பஸ்சினை நிறுத்திய டிரைவர், மாணவர்களை பஸ்சிலிருந்து கீழே இறக்கினார். தொடர்ந்து கிளினர் அம்ம களத்தூர் ராஜவேல் (36) உதவியுடன் ஆசிட் மீது நீரை ஊற்றி சுத்தம் செய்தார்.
தொடர்ந்து பஸ்சினை இயக்கிய டிரைவர், மாணவர்களை பள்ளியில் இறக்கிவிட்டார். வகுப்பறைக்கு சென்ற ஒரு சில மாணவர்கள் மயங்கி விழுந்தனர். சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக பள்ளி நிர்வாகம், பாதிக்கப்பட்ட 22 மாணவர்களையும் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தது. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்து நேற்று மாலை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பள்ளி பஸ்சின் டிரைவர் கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் கிளினர் ராஜவேல் மீது வழக்குப் பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக சின்னசேலத்தில் உள்ள மற்றொரு தனியார் பள்ளி பஸ் கவிழந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கதாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்