என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொல்பொருள் ஆராய்ச்சி"
- சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான தந்தப் பெட்டியைக் கொண்ட பளிங்குகளில் கிறிஸ்துவ அலங்கரிப்புகள் செய்யப்பட்டு உள்ளன.
- கரிந்தியன் டிராவா பள்ளத்தாக்கின் ஒரு பகுதியான இந்தப் பகுதியில் 2016 ஆம் ஆண்டு முதல் இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகம் அகழ்வாராய்ச்சிகளை நடத்தி வருகிறது.
தெற்கு ஆஸ்திரியாவில் 1,500 ஆண்டுகள் பழமையான பளிங்குகளாலான தந்தப் பெட்டியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு தெற்கு ஆஸ்திரியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் அகழ்வாராய்ச்சி செய்யும் போது அரிய பொருளை கண்டுபிடித்தனர். இது சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான தந்தப் பெட்டியைக் கொண்ட பளிங்குகளில் கிறிஸ்துவ அலங்கரிப்புகள் செய்யப்பட்டு உள்ளன.
பத்து கட்டளைகளைப் பெற்ற மோசஸூடன் இந்த தந்தப்பெட்டி இணைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. புனிதமான ஆரம்பகால கிறிஸ்தவ பொருட்களின் பற்றாக்குறை காரணமாக இந்த நினைவுச்சின்னம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மிக நுட்பமாக, அதிக வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்ட இந்த பெட்டியானது இர்சென் நகராட்சியில் உள்ள ஒரு சிறிய மலைப்பகுதியான பர்க்பிச்சலின் உச்சியில் அமைந்துள்ள ஒரு தேவாலயத்திற்குள் ஒரு பலிபீடத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்டது.
கரிந்தியன் டிராவா பள்ளத்தாக்கின் ஒரு பகுதியான இந்தப் பகுதியில் 2016 ஆம் ஆண்டு முதல் இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகம் அகழ்வாராய்ச்சிகளை நடத்தி வருகிறது.
இதுதொடர்பாக தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஜெரால்ட் கிராபெர் என்பவர் கூறுகையில், உலகளவில் இதுபோன்ற சுமார் 40 தந்தப் பெட்டிகள் எங்களுக்குத் தெரியும். எனக்குத் தெரிந்தவரை, கடைசியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு அகழ்வாராய்ச்சியின் போது இவற்றில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.
- தரைவழியாக ஊடுருவும் ரேடார் மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டன
- 900 வருடங்களுக்கு முற்பட்ட நகர் கண்டறியப்பட்டது என டாக்டர். லவ்னாரோ கூறினார்
பண்டையகால நாகரிகங்களில் சரித்திர புகழ் வாய்ந்தவை கிரேக்க மற்றும் ரோமானிய நாகரிகங்கள்.
ஐரோப்பாவில் உள்ள இத்தாலி, பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த மனித நாகரிக வளர்ச்சியை கண்ட நாடு. இதற்கு சான்றாக இத்தாலி முழுவதும் பழமை மாறாத கட்டிங்கள் இன்றும் சுற்றுலா பயணிகளை ஈர்த்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக (Cambridge University) தொல்பொருள் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று, டாக்டர். அலெஸ்ஸாண்ட்ரோ லவ்னாரோ (Dr. Alessandro Launaro) தலைமையில் மத்திய இத்தாலியில் உள்ள இன்டராம்னா லிரெனஸ் (Interamna Lirenas) எனும் இடத்தில் அகழ்வாரய்ச்சிகள் நடத்தியது. சுமார் 20 ஏக்கர் பரப்பில் பல இடங்களில் தரைவழியாக ஊடுருவும் திறன் வாய்ந்த ரேடார் கருவிகளை கொண்டு ஆய்வுகளை நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக, ஆராய்ச்சியாளர்கள், கி.பி. 3-ஆம் நூற்றாண்டு காலகட்ட நகரமான லாசியோ பகுதியில் பல தடயங்களை கண்டெடுத்துள்ளனர். தற்போது பயிர் நிலங்களாக உள்ள இந்நகர் அக்காலத்தில் சுமார் 2 ஆயிரம் வீடுகளை கொண்ட நகரமாக விளங்கியது தெரிய வந்துள்ளது.
"எவரும் இதற்கு முன்பு தோண்டி பார்க்க முயற்சிக்காத பகுதியில் எங்கள் ஆய்வை தொடங்கினோம். தோண்டிய பிறகு முதலில், மேற்புரத்தில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. சில உடைந்த மண்பானைகள் மட்டுமே கிடைத்தன. ஆனால், கீழே நீர் நிலைகள் தோன்றவில்லை. 900 வருட பழமை வாய்ந்த நகரத்தின் அறிகுறிகள் காணப்பட்டன" என டாக்டர். லவ்னாரோ தெரிவித்தார்.
லிரி நதிக்கு அருகே நடத்தப்பட்ட இந்த அகழ்வாராய்ச்சியில், ஒரு கிடங்கு, வழிபாட்டு தலம், 1500 பேர் அமர கூடிய கலையரங்கம், பண்ணை விலங்குகளுக்கான 19 திறந்தவெளி கூடங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எந்த போரினாலும் இந்நகர் அழிக்கப்பட்ட தடயங்கள் எதுவும் காணப்படவில்லை. கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற லொம்பார்ட் படையெடுப்பின் போது இந்நகரில் வாழ்ந்த மக்கள் அச்சம் காரணமாக வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்