search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய பேரிடர் மீட்பு படை"

    • கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது.
    • அரக்கோணத்தில் 300 பேர் கொண்ட 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, பருவமழை தொடங்க காரணமாக அமைய உள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி பருவமழை தொடங்கிய நிலையில், இந்தாண்டு முன்கூட்டியே தொடங்குகிறது.

    இதன் எதிரொலியால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கனவே ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது.

    அரக்கோணத்தில் 300 பேர் கொண்ட 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    தமிழ்நாடு மாநில அவசர கட்டுபாட்டு மையத்துடன் நேரடி தொடர்பில் தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் உள்ளனர்.

    • வடகிழக்கு பருவமழை இயல்பை வட அதிகளவில் பெய்ய வாய்ப்பு.
    • தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    தென்மேற்கு பருவகாற்று தென் மாநிலங்களில் விலகும்போது வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகும். இதன் காரணமாக தமிழகத்தில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும்.அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் இறுதி வரை இந்த பருவ காலம் நீடிக்கும்.

    வடகிழக்கு பருவமழை எனப்படும் இந்த காலக்கட்டத்தில் நல்ல மழை பொழிவும் இருக்கும். மிக கனத்த மழை பெய்து பாதிப்புகளையும் உருவாக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை வட அதிகளவில் பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அதன்படி, தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது. அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    கனமழையின் போது மீட்பு பணிகளில் ஈடுபட மொத்தம் 300 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஒரு குழுக்கு 30 பேர் வீதம் மொத்தம் பத்து குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவு வளாகத்தில் அவசர கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ரப்பர் படகுகள் உள்பட மீட்பு கருவிகளுடன் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதோடு தமிழ்நாடு மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்துடன் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேரடி தொடர்பில் உள்ளனர்.

    • புயல் சுழற்சி காரணமாக கேரள மாநிலத்தில் கனமழைக்கு வாய்ப்பு.
    • இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. ஒருசில மாவட்டங்களில் கனமழை கொட்டியது.

    இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் ஏற்பட்டிருக்கும் புயல் சுழற்சி காரணமாக கேரள மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அதில் குறிப்பாக மாநிலத்தில் இன்றும் நாளையும் கனமழையும், 23-ந்தேதி மிக கனமழையும் பெய்யும் என்று கூறப்பட்டிருக்கிறது. வானிலை மையம் தெரிவித்தபடியே கடந்த சில நாட்களாக கேளாவில் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

    மேலும் கேரள கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் கடல் சீற்றம் ஏற்பட்டு அலைகள் ஆக்ரோஷமாக அடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டி ருக்கிறது. கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் கேரள மாநிலத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது. மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களுடன் மொத்தம் 9 குழுக்கள் கேரளா வந்திருக்கின்றன.

    கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் இடுக்கி, பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம், கொல்லம், கோழிக்கோடு, திருச்சூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக அரக்கோணம் 4-வது பட்டாலியன் கமாண்டன்ட் தெரிவித்திருக்கிறார்.

    மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொண்டு மீட்பு பணிகளை மேற்கொள்வ

    தற்காக தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் கேரளாவில் அவசர கால செயல்பாட்டு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டி ருக்கிறது. அந்த அறை அரக்கோணத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
    • 100 பேர் கொண்ட 4 குழுக்கள் மீட்பு உபகரணங்களுடன் விரைகின்றன.

    தென் இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

    இதன் எதிரொலியால், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.

    தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டதின் பேரில் முன்செனச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதில், 100 பேர் கொண்ட 4 குழுக்கள் மீட்பு உபகரணங்களுடன் விரைந்துள்ளன. 

    ×