search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திர சட்டசபை தேர்தல்"

    • ஆந்திர சட்டசபை தொகுதிகளில் 175-ல் 160 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது.
    • தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரி ஆவது உறுதியாகி உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

    ஆந்திராவில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 175 ஆகும். இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியை பிடிக்கும்.

    இதற்கிடையே, ஆந்திர சட்டசபை தொகுதிகளில் 175-ல் 160 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது.

    தேவையான இடங்களுக்கு மேல் தெலுங்குதேசம் முன்னிலையில் இருப்பதால் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரி ஆவது உறுதியாகி உள்ளது.

    இந்நிலையில், ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமோக வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு வாழ்த்துகள். தங்களது தலைமை ஆந்திரத்துக்கு வளத்தையும் வளர்ச்சியையும் தந்து, அம்மாநில மக்களின் கனவுகளையும் நம்பிக்கையையும் நிறைவேற்றட்டும் என பதிவிட்டுள்ளார்.

    • தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஜூன் 9-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
    • முதல் மந்திரி ஜெகன் ரெட்டி தனது ராஜினாமாவை கவர்னரிடம் அளித்துள்ளார்.

    அமராவதி:

    பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2-ம் தேதி முடிவடைந்ததால் கடந்த 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

    ஆந்திராவில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 175 ஆகும். இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். இந்த தேர்தலில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் தனித்துப் போட்டியிட்டது.

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும், ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜனதா 10 இடங்களிலும் போட்டியிட்டது.வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே தெலுங்கு தேசம்- பா.ஜனதா கூட்டணி முன்னிலையில் இருந்தது.

    ஆந்திர சட்டசபை தொகுதிகளில் 175-ல் 158 இடங்களில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது. கூட்டணி இல்லாமல் தனித்து 131 தொகுதிகளில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது.

    ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமோக வெற்றி பெற்று வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜூன் 9-ம் தேதி அமராவதியில் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அமோக வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஆந்திர கவர்னர் அப்துல் நசீரிடம் ஜெகன்மோகன் ரெட்டி தனது ராஜினாமா கடிதத்தை இன்று அளித்துள்ளார்.

    • ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் ஆந்திராவில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.
    • ஜெகன்மோகன் ரெட்டி தேர்தலில் கூட்டணி அமைப்பதில் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி 5 முக்கிய தவறுகளை செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

    கடனில் தவிக்கும் மாநிலம்

    ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சிக்காலத்தில் ஆந்திர பிரதேசத்தின் நிதி நிலைமை ஒரு முக்கியமான பிரச்சனையாக இருந்தது. அவர் நவரத்தினலு என்று அழைக்கப்படும் 9 புதிய திட்டங்களை கொண்டு வந்தார். இதற்காக ரூ.13.5 லட்சம் கோடி கடனில் ஆந்திர மாநிலம் சிக்கித் தவிக்கிறது.

    இந்த திட்டங்களால் பிரபலமான வாக்குகளை பெற்றிருந்தாலும் பலரது கோரிக்கைகளை இந்த திட்டத்தின் மூலம் நிறைவேற்றவில்லை. அதனால் வாக்காளர்களுக்கு ஆட்சியின் மீது ஒரு விதமான அதிருப்தி ஏற்பட்டது.

    வேலைவாய்ப்பு

    மாநிலத்தில் போதிய கட்டமைப்பு, நம்பகத்தன்மையற்ற மின்சாரம், குடிநீர் பற்றாக்குறை, அதிக மின் கட்டணம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகள் வாக்காளர்களை விரக்தியடைய செய்தது.

    ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் ஆந்திராவில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் பொதுமக்களின் அதிருப்திக்கு பங்களித்தது.

    பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இலக்காகக் கொண்ட ஜெகன்மோகன் ரெட்டியின் கொள்கைகளும் குறிப்பிடத்தக்க விமர்சனங்களை எதிர்கொண்டன.

    பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை ஈர்ப்பதற்காக பல்வேறு சலுகைகள் மற்றும் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டை தொடர்ந்து வழங்குவது என அறிவித்தார். ஆனால் கபு சமூகத்திற்கு இதே போன்ற சலுகைகளை அவர் வழங்க மறுத்தார். இது வெறுப்புணர்வை தூண்டியது.

    எதிர்க்கட்சிகளும் சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்த ஜெகன்மோகன் ரெட்டி ஒரு பிரிவினரை உதாசீனப்படுத்துவதாக குற்றம் சாட்டினர்.

    வேட்பாளர் தேர்வு

    ஒரே நேரத்தில் சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் ஜெகன்மோகன் ரெட்டியின் வியூகம் அவருடைய கட்சியினரையே அதிருப்தியடைய செய்தது.

    அவர் பல எம்.எல்.ஏ.க்களை தொகுதி இடமாற்றம் செய்தார். மேலும் வேட்பாளர் பட்டியலில் இருந்தும் நீக்கினார். 14 எம்.பி.க்கள் மற்றும் 37 எம்.எல்.ஏ.க்களை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கினார். அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.

    இந்த நடவடிக்கை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரவலான அதிர்ச்சிக்கு வழி வகுத்தது.

    தேர்தல் கூட்டணி

    தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக மாநில திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு 2 மாதங்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இது அவருக்கு அனுதாப அலையை ஏற்படுத்தியது.

    மேலும் ஜெகன்மோகன் ரெட்டி தேர்தலில் கூட்டணி அமைப்பதில் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. அவர் தனித்தே போட்டியிட்டார்.

    ஆனால் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.க. மற்றும் நடிகர் பவன் கல்யாண் கட்சியுடன் பிரமாண்ட கூட்டணி அமைத்தார். பவன் கல்யாண் மூலம் அவருக்கு பா.ஜ.க.வுடன் கூட்டணி மட்டுமின்றி இளம் ரசிகர் பட்டாளம், கூட்டத்தை கவர்ந்திழுக்கும் திறனும் கிடைத்தது.

    பவன் கல்யாணின் கபு சமூக வாக்குகள் 18 சதவீதம் ஆந்திராவில் உள்ளன. இந்த வாக்குகள் சந்திரபாபு நாயுடு கூட்டணி கட்சிக்கு கிடைத்தது. இதுபோன்ற கூட்டணி அமைக்க ஜெகன் மோகன் ரெட்டி தவறி விட்டார். இந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா மற்றும் அவருடைய தாயார் இருவரும் அவருக்கு எதிராகவே நின்றனர்.

    • பாராளுமன்ற தேர்தலோடு ஆந்திர பிரதேசம், அருணாசல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் என நான்கு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட்டது.
    • மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

    நமது நாட்டில் 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலோடு ஆந்திர பிரதேசம், அருணாசல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் என நான்கு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேச மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குகள் கடந்த 2-ந் தேதி எண்ணப்பட்டன.

    அந்த வகையில், நாடு முழுக்க 542 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 2 மாநிலங்களின் சட்டசபைக்கு பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத்தொடர்ந்து மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 127 இடங்களை பெற்று முன்னிலை வகிக்கிறது. ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 21 தொகுதியில் மட்டும் முன்னிலை வகிக்கிறது. இதனால் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    ஜனசேனா கட்சி 20 இடங்களை பெற்றுள்ளது. பாஜக 7 இடங்களை பெற்றுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் அமராவதியில் தெலுங்கு தேசம் கட்சியினர், தொண்டர்கள் அலுவலகத்திற்கு வெளியே வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


    • ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.
    • ஆந்திர மாநிலத்தில் தற்போது முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முதல் மந்திரி சித்தராமையா மற்றும் மந்திரிகள் பிரசாரம் செய்தனர்.

    இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.

    இந்த தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர்களை பிரசாரத்தில் இறக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலத்தில் தற்போது முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

    இது காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதால் வெற்றி வாய்ப்பு உள்ளது.

    இதனால் ஆந்திர மாநிலத்தில் பிரசாரம் செய்ய உள்ளோம் என தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் தெலுங்கானா வி.ஐ.பி.க்கள் மதிக்கப்படவில்லை. சிபாரிசு கடிதங்கள் அதிகாரிகளால் மறுக்கப்படுகிறது. இதுகுறித்து விவாதம் நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

    • திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதன் மூலம் மக்களுக்கு மேலும் சேவை செய்ய பலம் கிடைக்கும்.
    • வருகிற 2024 சட்டமன்ற தேர்தலிலும் எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

    இதில் நடிகையும் மந்திரியுமான ரோஜாவுக்கு மீண்டும் சீட் கிடைக்காது என எதிர்க்கட்சியினர் கேலி கிண்டல் செய்து வருகின்றனர். இதற்கு ரோஜா பதிலடி கொடுத்துள்ளார்.

    நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரோஜா சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதன் மூலம் மக்களுக்கு மேலும் சேவை செய்ய பலம் கிடைக்கும். ஆந்திர மாநில மக்கள் நலமடையவும், ஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் முதல் மந்திரி ஆக வேண்டும். அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.

    நான் கட்சி நிகழ்ச்சிகளிலும் அமைச்சரவை கூட்டங்களிலும் முன் வரிசையில் இருந்து வருகிறேன்.

    நகரி தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ளேன். வருகிற 2024 சட்டமன்ற தேர்தலிலும் எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் எதிர்க்கட்சிகள் கேலி செய்து வருகின்றனர். அது பலிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×