என் மலர்
நீங்கள் தேடியது "ஏகாதசி விளக்கம்"
- அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் ஒன்றாக உதித்து ஒன்றாக மறைகின்றன.
- சூரியனிலிருந்து சந்திரன் தொலைவில் விலகிச் செல்லுவதால் புவிஈர்ப்பு சக்தி அதிகமாகிறது.
ஏகாதசியன்று முக்கியமாக உபவாசம் இருப்பது ஏன்? துவாதசியன்று அகத்திக் கீரையும், நெல்லிக்காயும் சாப்பிடவேண்டும் என்பது எதற்காக?
சந்திரன் பூமியை ஒருதடவை சுற்றிவர ஏறக்குறைய இருபத்தொன்பதரை நாட்கள் ஆகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு திதி எனப்படும். ஒரு சந்திரமாதத்தில் 30 திதிகள் உள்ளன.
அமாவாசையிலிருந்து பவுர்ணமி வரையில் உள்ள 15 திதிகள் சுக்லபட்சம் (வளர்பிறை) எனப்படும். பவுர்ணமியிலிருந்து அமாவாசை வரையில் உள்ள 15 திதிகள் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) எனப்படும்.
அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் ஒன்றாக உதித்து ஒன்றாக மறைகின்றன. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் 12 டிகிரி வீதம் சந்திரன் சூரியனிலிருந்து பிரிந்து செல்லுகிறது.
நான்காவது நாள் - அதாவது, சதுர்த்தசியன்று சந்திரன் சூரியனிலிருந்து 36 டிகிரி முதல் 48 டிகிரி வரை பின்னால் உள்ளது.
பதினொன்றாவது நாள் ஏகாதசியன்று சூரியனிலிருந்து 132 டிகிரி பின்னால் இருக்கிறது. பவுர்ணமியன்று சந்திரன் சூரியனிலிருந்து 180 டிகிரியில் இருக்கிறது.
மேற்கூறிய நாட்களில் சூரியனிலிருந்து சந்திரன் தொலைவில் விலகிச் செல்லுவதால் புவிஈர்ப்பு சக்தி அதிகமாகிறது. அந்த சமயத்தில் எப்போதும்போல உணவு அருந்தினால் அது சரியாக செரிக்காது.
ஆகையால் நமது முன்னோர்கள் அந்த நாட்களில் விரதம் இருக்கச் சொல்லி இருக்கிறார்கள். வைகுண்ட ஏகாதசியன்று சந்திரன் சூரியனுக்கு 135 டிகிரி பின்னால் இருக்கிறது. அன்று சூரியன் நடுவரைக்குத் தெற்கே மிக அதிகமான தூரத்தில் இருக்கிறான். அன்று புவி ஈர்ப்பு சக்தி மிக அதிகமாக இருப்பதால் உபவாசம் இருக்கிறோம்.
ஏகாதசியன்று விரதமிருந்தால், முதல் பத்து நாட்கள் உணவு உட்கொண்டு, அதனால் உள்ளே சேர்ந்துள்ள கழிவுப்பொருட்கள் கரைந்து வெளியேறுகின்றன. அன்று ஜீரணக் கருவிகளுக்கும் ஓய்வு கிடைக்கிறது.
பின் நமக்கு வைட்டமின்கள் தேவைப்படுகின்றன. முக்கியமாக வைட்டமின் "ஏ" வும், "சி" யும் தேவைப்படும். ஆகவேதான், துவாதசியன்று வைட்டமின் "ஏ" சத்து நிறைந்த அகத்திக் கீரையையும், வைட்டமின் "சி" சத்து நிறைந்த நெல்லிக்காயையும் உணவுடன் சேர்த்துக் கொள்ளுகிறோம்.
ஒவ்வொரு நாளும் நாம் செய்யவேண்டிய சூரிய நமஸ்காரமும், இருமுறை எகாதசியோடு தொடர்ந்து வருகிற துவாதசி உணவும், நம்முடைய கண்ணொளியைக் காத்து உடல் நலத்தை பேணி வருகின்றன.
- ஏகம் என்றால் “ஒன்று” என்று பொருள். தசி என்றால் “பத்து” என்று அர்த்தம்.
- ஏகாதசி என்பது திதிகளில் பதினொன்றாவதாக வருவது. ஏகம்+தசி=ஏகாதசி.
வைகுண்ட ஏகாதசி தினம் அன்று விரதம் இருந்தால் செல்வம் சேரும்.
மாதத்துக்கு 2 ஏகாதசி வீதம் ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் வரும்.
ஒவ்வொரு மாதமும் சுக்லபட்சம் என்ற வளர்பிறையிலும், கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறையிலும் பதினோராவது நாள் வருவதே ஏகாதசி.
அதாவது ஏகாதசி என்பது திதிகளில் பதினொன்றாவதாக வருவது. ஏகம்+தசி=ஏகாதசி.
ஏகம் என்றால் "ஒன்று" என்று பொருள். தசி என்றால் "பத்து" என்று அர்த்தம்.
ஏகாதசி என்றால் பதினொன்று நாள் என்று பொருள்.
ஞானேந்திரியம் 5, கர்மேந்திரியம் 5, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் திருமாலுடன் ஒன்றுபடுத்தும் நாளே வைகுண்ட ஏகாதசி.
இந்த ஒன்றுதல், அவனோடு என்றுமே ஒன்றுவதாக உருப்பெறும் என்பதுதான் ஏகாதசி விரதத்தின் உட்பொருள்.
அந்த உட்பொருளின் வெளிவடிவாக நடைபெறுவதுதான் பரமபத வாசல் திறப்பும், வைகுண்ட ஏகாதசித் திருநாளும்.
மார்கழியில் வரும் வளர்பிறை ஏகாதசி தான் சிறப்பானது.
இதை பெரிய ஏகாதசி மற்றும் மோட்ச ஏகாதசி என்பார்கள்.