search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செக் குடியரசு"

    • கான்சிகாவோ அடித்த கோல் அந்த அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
    • செக் குடியரசு அணி ஒரு கோல் அடித்தது.

    யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்று நள்ளிரவு நடைபெற்ற க்ரூப் எஃப் பிரிவு போட்டியில் போர்ச்சுகல் மற்றும் செக் குடியரசு அணிகள் மோதின. இந்த போட்டியில் போர்ச்சுகல் நாட்டின் இளம் வீரர் பிரான்சிஸ்கோ கான்சிகாவோ அடித்த கோல் அந்த அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

    21 வயதான போர்ச்சுகல் வீரர் எல்லை கோட்டின் அருகில் வைத்து அடித்த ஷாட்-ஐ செக் குடியரசு வீரர்களால் சரியாக தடுக்க முடியாமல் போனது. இது அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த வெற்றி மூலம் போர்ச்சுகல் அணி மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளது.

    துவக்கம் முதலே போர்ச்சுகல் அணி களத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. எனினும், போராடிய செக் குடியரசு வீரர்கள் கடும் போட்டியை ஏற்படுத்தினர். கிடைக்கும் இடங்களில் கோல் அடிக்கும் முயற்சியில் செக் குடியரசு வீரர்கள் ஈடுபட்டனர். இதன் பலனாக போட்டியின் 60-வது நிமிடத்தில் செக் குடியரசு அணி ஒரு கோல் அடித்தது.

    இதைத் தொடர்ந்து செக் குடியரசு வீரர் ராபின் ரனாக் செய்த தவறு காரணமாக எதிரணிக்கு ஒரு கோல் கிடைத்தது. இரு அணிகளும் ஒரு கோல் என்ற நிலைக்கு வந்ததும், போட்டி சமனில் முடிய கூடாது என்ற எண்ணத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர்.

    பிரபல வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 6-வது யூரோ கோப்பை தொடரில் களமிறங்கி விளையாடி வருகிறார். எனினும், நேற்றைய போட்டியில் அவரது ஷாட்கள் எதையும் கோலாக மாறாமல் எதிரணி கோல் கீப்பர் ஜின்ட்ரிச் ஸ்டானெக் பார்த்துக் கொண்டார். இதனால் போட்டியில் விறுவிறுப்பு எகிறியது.

    இதையடுத்து இரு அணி வீரர்களும் தங்கள் அணிக்கு ஒரு கோல் அடிக்க போராடினர். எனினும், போர்ச்சுகல் அணியின் கான்சிகாவோ அடித்த கோல் அந்த அணிக்கு வெற்றியை கொடுத்தது. 

    • சரக்கு ரெயில் ஒன்று திடீரென தடம் புரண்டு கவிழ்ந்தது.
    • விபத்தில் சிக்கிய ரெயில் தனியார் நிறுவனத்தால் இயக்கப்பட்டதாகும்.

    பர்டுபிஸ்:

    செக் குடியரசு நாட்டின் தலைநகர் பிராக்கிலியில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் பர்டுபிஸ் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் ஒன்று திடீரென தடம் புரண்டு கவிழ்ந்தது.

    அப்போது அந்த வழியாக வந்த பயணிகள் ரெயில் எதிர்பாராத விதமாக சரக்கு ரெயில் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 4 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 26 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய ரெயில் தனியார் நிறுவனத்தால் இயக்கப்பட்டதாகும்.

    இந்த ரெயில் ஸ்லோவாக்கியாவின் எல்லைக்கு அருகில் உள்ள மேற்கு உக்ரைன் நகரான சோப் நோக்கி சென்று கொண்டிருந்தது.இந்த ரெயிலில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டினர்.

    விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாக செக்குடியரசு நாட்டின் பிரதமர் பீட்டர் பியாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் 2 ரெயில்கள் மோதிக்கொண்டது மிகவும் துரதிஷ்ட வசமானது. விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • கடைகளுக்கு சென்று மக்கள் எளிதாக துப்பாக்கிகளை விலைக்கு வாங்கலாம்
    • 14 பேரை கொன்ற அந்த மாணவனிடம் 7 துப்பாக்கிகள் இருந்தது தெரிய வந்தது

    மத்திய ஐரோப்பாவில் உள்ள 1.25 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு, செக் குடியரசு (Czech Republic). இதன் தலைநகரம் பிரேக் (Prague).

    செக் நாட்டில், பொதுமக்கள் துப்பாக்கிகளை விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்று எந்த கட்டுப்பாடும் இன்றி அதனை வாங்குவது மிக எளிது. ஒவ்வொரு குடிமகனுக்கும் தன்னை காத்து கொள்ள துப்பாக்கி வைத்திருப்பதை அடிப்படை உரிமையாக அந்நாட்டு அரசியல் சட்டம் அனுமதிக்கிறது.

    கடந்த டிசம்பர் மாதம், செக் குடியரசின் பிரபலமான சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு 24 வயது பட்டதாரி மாணவன், திடீரென அங்கு இருந்தவர்களை நோக்கி தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.

    மாணவன் சுட்டதில், சக மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.

    பிறகு, அந்த மாணவன் வேறு ஒரு ஏஆர்-10 ரக துப்பாக்கியை எடுத்து பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவு வாசலில் அங்கும் இங்கும் நடந்தவாறு பிறரை மிரட்டினான்.

    கொலை வெறியுடன் சுற்றிய மாணவனிடமிருந்து தப்பிக்க பல மாணவர்கள் பல்கலைக்கழக் கட்டிடத்தின் வெளிப்புறத்தில் ஜன்னல்களுக்கு கீழே ஒளிந்து கொண்டனர்.


    காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்தனர். அவனை பிடிக்க சிலர் முயலும் முன்பாக வேறு ஒரு சிறு துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தான்.

    இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவானது.


    விசாரணையில், மன அழுத்தம் காரணமாக அவன் இவ்வாறு செய்ததாகவும், அவனிடம் 7 துப்பாக்கிகள் இருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து, செக் குடியரசின் 281 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றம் அவசர அவசரமாக கூடியது.

    சம்பவம் நடந்து சுமார் 1 மாதம் கடந்த நிலையில் மக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையில் ஒரு சட்ட திருத்தத்திற்கு கீழ் சபை முன்மொழிந்துள்ளது. மேல்சபையான "செனட்" ஒப்புதல் அளித்து, ஜனாதிபதி கையெழுத்திட்டால் இது சட்டமாகி விடும்.

    2026ல் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

    "உலகின் அமைதியான நாடுகள்" பட்டியலில் ஐரோப்பிய நாடுகளில் செக் குடியரசு, 8-வது நாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறந்த மாணவராகவும் திகழ்ந்து வந்தார்.
    • டேவிட் கோசாக் ஏன் இந்த கொடூர செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை.

    ஐரோப்பிய நாடான செக்குடியரசு நாட்டின் தலைநகரான பராக்கில் சார்லஸ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.நேற்று இந்த பல்கலைக்கழகத்தில் புகுந்த மர்ம நபர் தான் கையில் வைத்திருந்த நவீனரக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். கண்ணில் பட்டவர்களை எல்லாம் குருவியை சுடுவது போல சுட்டார்.

    இதனால் உயிருக்கு பயந்த மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். சிலர் வகுப்பறை கதவுகளை மூடிக்கொண்டனர். பலர் குண்டுபாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் இறந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் அந்த பல்கலைக்கழகத்தை சுற்றி வளைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

    இந்தநிலையில் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரும் இந்த சம்பவத்தில் உயிர் இழந்தார். அவர் தனக்குதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது போலீசார் சுட்டுக்கொன்றனரா? என்பது தெரியவில்லை.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் டேவிட் கோசாக் (வயது 24) என்பதும், அந்த பல்கலைக்கழக மாணவர் என்பதும் தெரியவந்தது. இவர் மீது போலீசில் எந்த குற்ற வழக்குகளும் இல்லை. சிறந்த மாணவராகவும் திகழ்ந்து வந்தார். அவர் சட்டப்பூர்வமாக பல துப்பாக்கிகள் வைத்து இருந்தார். மேலும் நிறைய வெடிமருந்துகளும் வைத்து இருந்தார்.

    துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு பராக் நகருக்கு மேற்கே சொந்த ஊரான ஹோக் டவுனில் தனது தந்தையை கொன்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகி இருக்கிறது.

    டேவிட் கோசாக் ஏன் இந்த கொடூர செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த தாக்குதலின் பின்னணியில் பயங்கரவாத இயக்கங்கள் தொடர்பு எதுவும் இல்லை என அந்நாட்டு மந்திரி விடராகுசன் தெரிவித்துள்ளார். செக் குடியரசு நாட்டை பொறுத்தவரை இது போன்ற துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கியது கிடையாது. முதன் முறையாக இந்த பெரிய அளவிலான தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
    • துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்.

    செக் குடியரசு தலைநகரான பராகுவேவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    துப்பாக்கி சூடு நடைபெற்றதை அடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். திடீர் துப்பாக்கி சூட்டில் சிக்கி பலர் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

     


    பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் வேறு யாரும் துப்பாக்கியுடன் இல்லை என்பதை உள்துறை மந்திரி உறுதுப்படுத்தி இருக்கிறார். 

    ×