search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஜோரி"

    • பூஞ்ச் பகுதியில் நேற்று ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.

    ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையைில் இந்திய பாதுகாப்புப்படையினர் உள்ளூர் போலீசுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். ரகசிய தகவல் அடிப்படையில் தீவிரவாதிகள் மறைந்திருக்கும் இடத்திற்கு சென்று அவர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி செல்லும்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்குதல் நடத்தும்போது, வீரர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இதனால் பூஞ்ச் உள்ளிட்ட பல பகுதியில் அடிக்கடி வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

    நேற்று பூஞ்ச், ரஜோரி பகுதியில் பாதுகாப்புப்படை வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் மூன்று வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

    இதனால் அந்த பகுதியில் ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை பயங்கரவாதிகள் மறைந்திருக்கும் இடத்தை வீரர்கள் நெருங்கிய நிலையில், பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். அதற்கு பாதுகாப்புப்படையினரும் பதிலடி கொடுத்தனர். இருந்தபோதிலும் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    கடந்த மாதம் ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த நிலையில் பூஞ்ச் ரஜோரியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்து உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    நேற்று பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதல் மீண்டும் ஒரு புல்வாமா தாக்குதல். அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. நம்முடைய வீரர்களின் தியாகத்தை வைத்து நீங்கள் (பா.ஜனதா) மீண்டும் அரசியல் செய்ய விரும்புகிறீர்களா?. 2024-ல் மீண்டும் புல்வாமா விவகாரத்தை வைத்து வாக்கு கேட்க விரும்புகிறீர்களா?.

    பூஞ்ச் தாக்குதல் குறித்து நாங்கள் கேள்வி கேட்டால், அதன்பின் அவர்கள் எங்களை டெல்லி அல்லது நாட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுவார்கள்.

    இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    • ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.
    • இன்று காலை கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றதில் 4 வீரர்கள் வீரமரணம்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச், ரஜோரியில் தேரா கி காலி பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 வீரர்கள் மரணம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மூன்று பேர் காயம் அடைந்தனர். பயங்கரவாதிகளை தேடும்பணி நடைபெற்று வருகிறது.

    கடந்த மாதம் இதேபோன்று ராஜோரியில் நடைபெற்ற பயங்கர சண்டையில் இரண்டு கேப்டன்கள் உள்பட ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    ×