என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய கடற்படை கப்பல்"
- இந்திய கடற்படையை சேர்ந்த விமானம் அரபிக்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது.
- போர்க்கப்பல் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் நவீன வசதிகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சோமாலியா:
அரபிக்கடல் பகுதியில் கடந்த 14-ந்தேதி மால்டா நாட்டு கொடியுடன் சென்ற எம்.வி. ரூன் சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தினார்கள்.
அந்த கப்பலில் ஊழியர்கள் உள்பட 18 பேர் இருந்தனர். அதில் பயணம் செய்த மாலுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவருக்கு உதவி செய்வதற்காக இந்திய கடற்படை கப்பல் உதவி கோரப்பட்டது.

இதையடுத்து இந்திய கடற்படையை சேர்ந்த விமானம் அரபிக்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா நாட்டுக்கு செல்வது தெரிய வந்தது. உடனே இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ் கொல்கத்தா அந்த பகுதிக்கு சென்று கடத்தப்பட்ட கப்பலை இடைமறித்தது. இதனால் கடற்கொள்ளையர்கள் உடல்நலம் சரியில்லாமல் இருந்த மாலுமியை விடுவித்தனர். அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கடற்கொள்ளையர்களை தடுக்கும் நடவடிக்கையில் இந்தியா தீவிரம் காட்டி உள்ளது. ஏடன் வளைகுடா பகுதியில் 2-வது போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.கொச்சி கப்பல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பல் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் நவீன வசதிகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- கடற்படையின் விரைவுப்படகு கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
- விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை கடற்கரையில் படகு விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்த நிலையில், சம்பந்தப்பட்ட கடற்படையின் படகு ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா அருகே நேற்று கடற்படையின் விரைவுப்படகு கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
விபத்து தொடர்பாக இந்திய கடற்படை அறிக்கையின்படி, எலிஃபெண்டா தீவுகளில் இருந்து 110 பயணிகளை இந்தியா கேட்வேக்கு ஏற்றிச் சென்ற வேகப் படகு, கடலில் என்ஜின் சோதனையின் கீழ், இயங்கி வந்த கடற்படை விரைவுப் படகு இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இறந்தவர்களில் கடற்படை படகில் இருந்த இருவர் உட்பட 12 பொதுமக்கள் மற்றும் இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் என 13 பேர் உயிரிழந்துள்ளனர். படகில் இருந்த 99 பேர் மீட்கப்பட்டனர்.
மேலும், மாயமானவர்களை மீட்பதற்காக அப்பகுதியில் 11 கடற்படை படகுகள், மரைன் போலீசாரின் 3 படகுகள் மற்றும் கடலோர காவல்படையின் ஒரு படகு ஆகியவை தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்" என்று குறிப்பிட்டிருந்தது.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த சகினாகாவைச் சேர்ந்த நதரம் சவுத்ரி என்கிற விபத்தில் உயிர் பிழைத்த நபரின் புகாரின் அடிப்படையில் கொலாபா போலீசார் கடற்படை படகின் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.