search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "17வது பட்டமளிப்பு விழா"

    • இளங்கலை, முதுகலை மற்றும் 45 பிஎச்டி மாணவர்கள் உட்பட மொத்தம் 1158 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
    • அதிக சதவீதத்தோடு தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த 100 மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தில் 17வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன கலையரங்கில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், கல்வி நிறுவனத்தின் நிறுவனரானஏ.என் ராதாகிருஷ்ணன் அவர்களை நினைவூட்டும் வகையில் விழாவின் பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். பிறகு, பட்டமளிப்பு விழா தொடங்கியது.

    விழாவிற்கு தலைமை தாங்கிய மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தின் இடைக்கால வேந்தரான கோமதி ராதாகிருஷ்ணன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த மெட்ராஸ் இ.என்.டி ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரும் பேராசிரியருமான பத்மஸ்ரீ. டாக்டர் மோகன் காமேஸ்வரன் தலைமை வகித்தார்.

    விழாவில் சிறந்த கல்வி சாதனைகளை அங்கீகரித்து, இளங்கலை, முதுகலை மற்றும் 45 பிஎச்டி மாணவர்கள் உட்பட மொத்தம் 1158 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கூடுதலாக, அதிக சதவீதத்தோடு தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த 100 மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதே நேரத்தில் கழகத்தின் மதிப்பிற்குரிய ஏழு முன்னாள் மாணவர்கள் 'சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருது' களைப் பெற்றனர்.

    தொடர்ந்து, உட்சுரப்பியல் மருத்துவரும் மற்றும் பொது மருத்துவரும் ஆன டாக்டர் உஷா ஸ்ரீராம் அவர்களுக்கு மகப்பேறு மருத்துவ நலன் மற்றும் பெண் முன்னேற்றம் ஆகிய துறைகளில் அவர் கொடுத்த சிறப்பான பங்களிப்பை பாராட்டும் வகையில் "ஹானரிஸ் காசா" கவுரவ விருது வழங்கப்பட்டது. மேலும், டாக்டர். நிமல் ராகவனுக்கு சமூகப் பொறுப்பு விருது வழங்கப்பட்டது.

    ×