search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எண்ணெய் கப்பல்"

    • கொமாரோஸ் நாட்டின் `பிரெஸ்டீஜ் பால்கன்' என்ற அந்த கப்பலில் 13 இந்தியர்கள் உள்பட 16 பணியாளர்கள் பயணித்தனர்.
    • மீதமுள்ள 7 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மஸ்கட்:

    ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து ஏமனின் ஏடன் துறைமுகத்துக்கு ஒரு எண்ணெய் கப்பல் புறப்பட்டது. கொமாரோஸ் நாட்டின் `பிரெஸ்டீஜ் பால்கன்' என்ற அந்த கப்பலில் 13 இந்தியர்கள் உள்பட 16 பணியாளர்கள் பயணித்தனர். அப்போது ஓமன் கடற்கரையில் இருந்து சுமார் 25 கடல் மைல் தூரத்தில் அந்த கப்பல் விபத்துக்குள்ளானது. இதனால் கப்பலில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தனர். மேலும் இந்த விபத்தால் அங்கு எண்ணெய் படலமாக மிதந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த ஓமன் கடலோர போலீசார் அங்கு விரைந்தனர். மேலும் இந்த மீட்பு பணியில் ஓமனுடன் இந்திய கடற்படையும் இணைந்தது. இதன்மூலம் நேற்று 8 இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில் தற்போது இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளார். அதேசமயம் ஒரு இந்தியர் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து மீதமுள்ள 7 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • கொமாரோஸ் நாட்டுக்குச் சொந்தமான ‘பிரெஸ்டீஜ் பால்கன்’ என்ற அந்த கப்பல் ஏமனின் ஏடன் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • மாயமான மற்ற மாலுமிகளை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

    மஸ்கட்:

    13 இந்திய மாலுமிகளுடன் சென்ற எண்ணெய் கப்பல் ஓமன் நாட்டின் கடற்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு 8 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் என 9 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். மாயமான மற்ற மாலுமிகளை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

    ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து ஒரு எண்ணெய் கப்பல் புறப்பட்டது. கொமாரோஸ் நாட்டுக்குச் சொந்தமான 'பிரெஸ்டீஜ் பால்கன்' என்ற அந்த கப்பல் ஏமனின் ஏடன் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இதில் 13 இந்திய மாலுமிகள் மற்றும் இலங்கையை சேர்ந்த 3 மாலுமிகள் என மொத்தம் 16 பேர் இருந்தனர். இந்த கப்பல் ஓமன் நாட்டின் ராஸ் மத்ரகா கடற்கரையில் இருந்து சுமார் 25 கடல் மைல் தொலைவுக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்தது. இதில் கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் கடலில் மூழ்கினர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஓமன் கடலோர காவல்படையினர் அங்கு விரைந்தனர். அவர்கள் கடலில் மூழ்கி மாயமான மாலுமிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு 8 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் என 9 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். மாயமான மற்ற மாலுமிகளை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எண்ணெய் கப்பல் விபத்து குறித்த தகவல் உடனடியாக அந்த நாட்டு கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
    • இந்திய போர்க்கப்பல் ஜூலை 15 -ந்தேதி முதல் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள இயக்கப்பட்டது.

    ஓமன் அருகே கடலில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில் 13 இந்தியர்கள் உள்பட 16 பேர் மாயமானார்கள்.

    எண்ணெய் கப்பல் விபத்து குறித்த தகவல் உடனடியாக அந்த நாட்டு கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் கப்பலில் இருந்து மாயமான 16 பேரையும் தேடும் பணியை துரிதப்படுத்தியுள்ளனர்.

    இந்நிலையில் ஓமன் அருகே கொமரோஸ் கொடியுடன் கூடிய கப்பல் கவிழ்ந்ததை அடுத்து, இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் தேஜ் (INS Teg) ஆனது P-81 கடல்சார் கண்காணிப்பு விமானம் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள பணியாளர்களுடன் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

    இந்திய போர்க்கப்பல் ஜூலை 15 -ந்தேதி முதல் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள இயக்கப்பட்டது. போர்க்கப்பல் ஜூலை 16-ந்தேதி கவிழ்ந்த எண்ணெய் டேங்கரை கண்டுபிடித்தது.

    • எண்ணெய் டேங்கர் ஓமன் கடற்கரையில் கவிழ்ந்ததாக அந்நாட்டின் கடல் பாதுகாப்பு மையம் நேற்று தெரிவித்தது.
    • ஓமனின் தென்மேற்கு கடற்கரையில் டுகும் துறைமுகம் அமைந்துள்ளது.

    கொமொரோஸின் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பலான 'பிரெஸ்டீஜ் பால்கன்' ஏடன் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கவிழ்ந்தது. இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த 16 பேர், 13 இந்தியர்களும், இலங்கையை சேர்ந்த மூன்று பேர் மாயமாகினர்.

    இந்த எண்ணெய் கப்பல் டேங்கர் ஏடன் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தது. மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் ஓமனின் துறைமுகத்திற்கு அருகே கப்பல் கவிழ்ந்தது.

    எண்ணெய் டேங்கர் ஓமன் கடற்கரையில் கவிழ்ந்ததாக அந்நாட்டின் கடல் பாதுகாப்பு மையம் நேற்று தெரிவித்தது. இந்த விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணி மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஓமனின் கடல்சார் பாதுகாப்பு மையம் கூறுகையில், எண்ணெய் டேங்கர் மூழ்கி, தலைகீழாக இருந்தது. இருப்பினும், கப்பல் நிலைபெற்றதா அல்லது எண்ணெய் அல்லது எண்ணெய் பொருட்கள் கடலில் கசிகிறதா என்பதை உறுதிப்படுத்தவில்லை.

    இந்த கப்பல் 2007ல் கட்டப்பட்ட 117 மீட்டர் நீளமுள்ள எண்ணெய் தயாரிப்பு டேங்கர் ஆகும். இத்தகைய சிறிய டேங்கர்கள் பொதுவாக குறுகிய பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

    ஓமனின் தென்மேற்கு கடற்கரையில் டுகும் துறைமுகம் அமைந்துள்ளது. இது நாட்டின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு சுரங்கத் திட்டங்களின் முக்கிய மையமாகும். பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் டுகும்-ன் பரந்த தொழில்துறை மண்டலத்தின் ஒரு பகுதியாகும்.

    • கப்பலில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
    • எம்.வி.செம் புளூட்டோ கச்சா எண்ணெய் கப்பலை நோக்கி போர்க்கப்பலும் அனுப்பப்பட்டுள்ளது.

    சவுதியில் இருந்து மங்களூர் நோக்கி வந்த இந்திய கச்சா எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடந்துள்ளது. கப்பலில் இருப்பவர்களை மீட்க கடலோர காவல் படையின் விக்ரம் கப்பல் விரைந்துள்ளது.

    கச்சா எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    கப்பலில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

    கச்சா எண்ணெய் கப்பலை நோக்கி போர்க்கப்பலும் அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தகவல் வெளியாகியுள்ளது.

    எம்.வி.செம் புளூட்டோ கச்சா எண்ணெய் கப்பலை நோக்கி போர்க்கப்பலும் அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

    ×