search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோடுஷோ"

    • ராஜாம்பேட்டை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கிரண் குமார் ரெட்டிக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
    • மோடி வருகையையொட்டி ஆந்திரா, தெலுங்கானாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 13-ந்தேதி ஆந்திரா, தெலுங்கானாவில் நடைபெறுகிறது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ரோடு ஷோ மற்றும் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    இன்று காலை தெலுங்கானா மாநிலத்திற்கு வந்தார். கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் ரோடு ஷோவில் கலந்து கொண்ட மோடி பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக பேசினார்.

    இதனைத் தொடர்ந்து மதியம் 2 மணிக்கு ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள பீலேரு வருகிறார். அங்கு ராஜாம்பேட்டை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கிரண் குமார் ரெட்டிக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    மாலை 5 மணிக்கு விஜயவாடா செல்கிறார். அங்கு பந்தர் சாலையில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தின் அருகில் இருந்து பிரதமர் மோடி ரோடு ஷோ செல்கிறார்.

    இந்த ரோடு ஷோவில் ஏராளமான பா.ஜ.க.வினர் திரண்டு பிரதமர் மோடியை வரவேற்கின்றனர்.

    மோடி வருகையையொட்டி ஆந்திரா, தெலுங்கானாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரோடு ஷோ நடைபெறும் இடங்களில் பலூன்கள், டிரோன்கள் பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டம் கிருஷ்ணா நகருக்கு சென்றார்.
    • நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்று மோடியை வரவேற்றனர்.

    கிருஷ்ணாநகர்:

    பிரதமர் மோடி நேற்று மேற்கு வங்காள மாநிலத்துக்கு சென்றார். அங்கு ஹூக்ளியில் உள்ள அரம்பாக் நகரில் ரூ.720 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார்.

    இன்று பிரதமர் மோடி ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டம் கிருஷ்ணா நகருக்கு சென்றார். அங்கு அவர் ரோடு ஷோ நடத்தினார்.

    திறந்த ஜீப்பில் நின்றபடி ஊர்வலமாக சென்றார். இதில் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். அவர்களை பார்த்து கை அசைத்தபடி பிரதமர் மோடி சென்றார். அப்போது மோடியை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்று மோடியை வரவேற்றனர்.

    கிருஷ்ணா நகரில் நடந்த நிகழ்ச்சியில் மின்சாரம், ரெயில், சாலை உள்ளிட்ட துறைகளில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்த திட்டங்கள் மேற்கு வங்காளத்தை வளர்ந்த மாநிலமாக மாற்றுவதை நோக்கமாக கொண்டவை. இது மேற்கு வங்காளத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வேகத்தை அளிக்கும். வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

    கடந்த 10 ஆண்டுகளில் மேற்கு வங்காளத்தில் ரெயில்வே கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். முன்பை விட இரண்டு மடங்கு அதிகமாக அரசு செலவிடுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மறுசீரமைக்கப்பட்ட புதிய ரெயில் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
    • ரோடுஷோ நிகழ்ச்சியையொட்டி பிரதமர் மோடியை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் வர உள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி அதற்கு முன்பு வருகிற 30-ந் தேதி, அயோத்தி விமான நிலையம் திறக்கப்படுகிறது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். விமான நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. மறுசீரமைக்கப்பட்ட புதிய ரெயில் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    இதற்காக பிரதமர் மோடி 15 கி.மீ. தூரம் ரோடுஷோ நடத்தி ரெயில் நிலையத்துக்கு செல்கிறார். என்.எச்.27, தரம் பாதை, லதா மங்கேஷ்கர் சவுக், ராம் பாதை, டெதி பஜார், மொகாப்ரா சந்திப்பு வழியாக அவர் ரோடுஷோ நடத்துகிறார். ரோடுஷோ நிகழ்ச்சியையொட்டி பிரதமர் மோடியை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் வர உள்ளனர்.

    ×