search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பகவத் மான்"

    • கெஜ்ரிவால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார்.
    • அவர் இன்சுலின் பெறுகிறார். பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை உற்பத்தி குறித்து என்னிடம் கேட்டார்.

    டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இன்று பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் சந்தித்து பேசினார்.

    பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    கெஜ்ரிவால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். அவர் இன்சுலின் பெறுகிறார். பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை உற்பத்தி குறித்து என்னிடம் கேட்டார். அதேபோல் மின்சார வினியோகம் குறித்தும் கேட்டறிந்தார். பஞ்சாப் மாநிலத்தின் அரசு பள்ளியில் படித்த 158 மாணவர்கள் ஜேஇஇ முதன்மை தேர்தலில் தேர்ச்சி பெற்றதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார்.

    நான் சமீபத்தில் குஜராத் சென்றிருந்தேன். அதுகுறித்து கேட்டறிந்தார். ஆம் ஆத்மிக்கு குஜராத்தில் மனதை கவரும் வகையில் ஆதரவு இருப்பதாக தெரிவித்தேன். அரசியலமைப்பு பாதுகாப்பதற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற தகவலை என்னிடம் தெரிவித்தார். எங்களுடைய அனைத்து தலைவர்களும் ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார்கள்.

    இவ்வாறு பகவத் மான் தெரிவித்தார்.

    • பஞ்சாப் செல்லும் அவர் பொற்கோவில் சென்று பிரார்த்தனை செய்கிறார்.
    • விவசாயிகள் போராட்டம் நடத்தும் நேரத்தில் மம்தா பயணம் மேற்கொள்கிறார்.

    மேற்கு வங்காள முதல் மந்திரியாக இருக்கும் மம்தா பானர்ஜி வருகிற 21-ந்தேதி பஞ்சாப் மாநிலம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் செல்லும் அவர் பொற்கோவிலில் சாமி தரிசனம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அத்துடன் டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் ஆகியோரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி டெல்லி மற்றும் பஞ்சாபில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. இதனால் பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மம்தா பானர்ஜி அங்கே செல்கிறார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பகவத் மான்-க்கு சீக்கியர்களின் வரலாறு தெரியவில்லை.
    • அவரை பார்க்கும்போது, அவரது அறிக்கையை கேட்கும்போது நாங்கள் கவலையாக உணர்கிறோம்.

    சிரோமணி அகாலி தளம் தலைவர் பஞ்சாப் முதல்வர் பகவத் மான்-ஐ கடுமையாக விமர்சனம் செய்தார். பகவத் மான் குறித்து சுக்பீர் சிங் பாதல் கூறியதாவது:-

    பகவத் மான்-ஐ நான் சீக்கியராக கருதவில்லை. அவர் அணிந்துள்ள தலைப்பாகை அவரை சீக்கியராக காட்டுகிறது. அவருக்கு சீக்கியர்களின் வரலாறு தெரியவில்லை. அவரை பார்க்கும்போது, அவரது அறிக்கையை கேட்கும்போது எங்கங்கு கவலையாக உள்ளது.

    இந்தியாவில் 18 சதவீதம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒற்றுமையாக இல்லாததால் அவர்களுக்கு என தலைவர் இல்லை. நாம் இரண்டு சதவீதம்தான் உள்ளோம். என்றபோதிலும் நாம் ஸ்ரீ அகால் தக்த் சாகிப் கீழ் ஒன்றிணைந்துள்ளோம்.

    அவர்கள் (ஆம் ஆத்மி) பஞ்சாபை சுரண்டி கொண்டிருக்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பகவத் மான் கிடையாது.

     சீக்கியர்களை கொண்ட அனைத்து மாநிலங்களிலும் சிரோமணி அகாலி தளம் அமைப்புகளை தொடங்கும்.

    இவ்வாறு சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆணடு பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் கட்சிகள் படுதோல்வியடைந்தன. 117 இடங்களை கொண்டு பஞ்சாபில் 92 இடங்களை பிடித்து ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

    ×