search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேமராமேன்"

    • மும்பை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னியுடன் ரோகித் சர்மா பேசிக்கொண்டிருந்தார்.
    • அப்போது அவர் கேமராமேனை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டது சமூக வலைதளத்தில் வைரலாகியது.

    மும்பை:

    மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா, மும்பை அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பயிற்சியாளர்களில் ஒருவருமான அபிஷேக் நாயருடன் பேசிய வீடியோவை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த வாரம் வெளியிட்டது.

    அந்த வீடியோவில், ரோகித் சர்மாவும், அபிஷேக் நாயரும் பேசுவது தெளிவாக கேட்கவில்லை. சில ரசிகர்கள் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரோகித் சர்மா பேசுவதை மட்டும் தனியாக பிரித்து எடுத்தனர். அதில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணி பற்றி பேசி இருப்பது தெரியவந்தது. இதன்மூலம் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மீது கடும் அதிருப்தியில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

    இந்த சர்ச்சை வீடியோவை வெளியிட்ட சில நிமிடங்களில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நீக்கிவிட்டது.

    இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த ஐ.பி.எல். போட்டியில் மும்பை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னியுடன் ரோகித் சர்மா பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கேமராமேனை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டார். ஏற்கனவே ஒரு ஆடியோ வெளியாகி சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளது. எனவே ஆடியோவை ஆப் செய்யுங்கள் என தெரிவித்தார். இதுதொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இன்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
    • அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 318 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 264 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், நாதன் லயன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 54 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்சத திரையில் காதலர்கள் மடியில் படுத்து இருப்பது போன்ற காட்சி வெளியானது. இதனை பார்த்த அந்த காதலர்கள் முகத்தை மூடிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். நல்ல வேலை செய்தீர்கள் கேமரான் மேன், கொடுத்த வேலைக்கு மேல் கூடுதல் வேலை பார்த்துள்ளீர்கள், போட்டியை காண வந்தீர்களா காதல் செய்ய வந்தீர்களா, என சில ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். பல ரசிகர்கள் போட்டியை வீடியோ எடுக்க சொன்னா அப்பாவி காதலர்களை வீடியோ எடுத்து காட்டிக் கொடுத்து வீட்டீர்களே கேமரா மேன் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    ×