என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஹவுதி அமைப்பு"
- இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் பாதுகாப்பை வழங்குவதற்காக நிறுத்தப்பட்டு வருகின்றன.
- கடந்த 24 மணி நேரத்தில் இந்திய கடற்படையின் 2-வது கடற்கொள்ளையர் எதிர்ப்பு நடவடிக்கை இதுவாகும்.
புதுடெல்லி:
இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செங்கடல், அரபிக்கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி சோமாலியா கடற்கொள்ளையர்களும் கப்பல்களைக் கடத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் பாதுகாப்பை வழங்குவதற்காக நிறுத்தப்பட்டு வருகின்றன.
ஈரானை சேர்ந்த 17 பேர் கிழக்கு சோமாலியாவின் ஏடன் வளைகுடா பகுதியில் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சோமாலியா கடற்கொள்ளையர்கள் அந்தக் கப்பலை சிறைபிடித்தனர். அங்கு ரோந்து பணியில் இருந்த இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் சுமித்ரா விரைந்து சென்று மீன்பிடி கப்பலில் இருந்த 17 ஈரானியர்களை பத்திரமாக மீட்டனர்.
இந்நிலையில், இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சுமித்ரா கொச்சி கடற்கரையில் இருந்து 800 மைல் தொலைவில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்களுடன் கடத்தப்பட்ட ஈரான் கொடியுடன் பறந்த அல் நமீமி என்ற கப்பலை மீட்டது. இந்திய கடற்படையின் மரைன் கமாண்டோக்கள் படகிலிருந்த 19 ஊழியர்களை பத்திரமாக மீட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்திய கடற்படையின் இரண்டாவது வெற்றிகரமான கடற்கொள்ளையர் எதிர்ப்பு நடவடிக்கை இதுவாகும்.
- ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணைகளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.
- கடந்த 3 நாளில் அமெரிக்கா சுட்டு வீழ்த்திய 2வது ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன்:
இஸ்ரேல் ராணுவம்-காசாவின் ஹமாஸ் ஆயுதக்குழு இடையிலான போா் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிது. இந்த விவகாரத்தில் பேசுபொருள் ஆகியிருக்கும் மற்றொரு அமைப்பு ஹவுதி.
செங்கடலில் இஸ்ரேலை நோக்கிப் பயணிக்கும் அல்லது இஸ்ரேலிலிருந்து பயணிக்கும் சரக்கு கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதன் மூலம் உலக நாடுகளை கவலைகொள்ளச் செய்திருப்பவர்கள் ஏமனை தலைமையிடமாக கொண்ட இந்த ஹவுதி கிளா்ச்சியாளா்கள்.
உலகின் பிரதான கிழக்கு-மேற்கு வா்த்தக வழித்தடமாக செங்கடல் அமைந்துள்ளது. இந்தச் செங்கடலில் வா்த்தக கப்பல்கள் மீது ஹவுதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தி வருவதன் மூலம் சூயஸ் கால்வாயை அணுகுவது பெரும் ஆபத்தாக மாறியுள்ளது.
சூயஸ் கால்வாய் வழியாக ஆசியாவுடன் ஐரோப்பாவையும், வட அமெரிக்காவையும் இணைக்கும் முக்கிய வா்த்தகப் பாதையை ஹவுதி அமைப்பினா் சீா்குலைத்துள்ளனா். இந்தப் பாதையையே பல கப்பல்கள் தவிா்க்கத் தொடங்கியுள்ள நிலையில், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்வுக்கும் வழிவகுத்துள்ளது.
இதற்கிடையே, சில தினங்களுக்கு முன் செங்கடல் பகுதியைக் கடந்த ஒரு கப்பல் மீது ராக்கெட் மற்றும் டிரோன் உள்ளிட்ட தாக்குதல்களை ஹவுதி அமைப்பினா் நடத்தினர். அதனை முறியடிக்கும் விதமாக அமெரிக்க ராணுவப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்காவின் பென்டகன் தெரிவித்தது.
இந்நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீசிய ஏவுகணையை அமெரிக்க ராணுவப் படை சுட்டு வீழ்த்தியது. கடந்த 3 நாட்களில் அமெரிக்கா சுட்டு வீழ்த்திய 2வது ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்