என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "வீட்டுவசதி குடியிருப்பு"
- பல அரசு துறை அதிகாரிகளும், ஊழியர்களும் தங்கி இருந்தனர்.
- குடியிருப்பில் தங்கி இருந்த அனைவரும் வாடகைக்கு வெளியில் தங்கி உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புகள் 1969-ல் கட்டப்பட்டது. இதில் ஏ.பி.சி.டி. ஆகிய பிரிவுகளில் மூன்று அடுக்குகள் கொண்ட 230 வீடுகள் உள்ளன. பின்னர் 1990-ம் சூண்டு எம்.எச்.பிரிவு குடியிருப்புகள் கட்டப்பட்டது. இதிலும் 3 அடுக்குகள் கொண்ட, 90 குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு காஞ்சிபுரம் கோட்டாட்சியர் உட்பட பல அரசு துறை அதிகாரிகளும், ஊழியர்களும் தங்கி இருந்தனர்.
தற்போது அந்த குடியிருப்பில் தங்கி இருந்த அனைவரும் வாடகைக்கு வெளியில் தங்கி உள்ளனர்.
வீடுகள் சிதிலமடைந்து, வீட்டின் உதவுகள், ஜன்னல்கள், மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தும் மிக மோசமான நிலையில் உள்ளன. அனைத்து வீடுகளும், புதர்கள் மண்டி, விஷ பூச்சுகள் நடமாட்டம் அதிகாரித்து உள்ளது. எனவே இந்த குடியிருப்பில் உள்ள வீடுகளை இழந்து விட்டு புதிய குடியிருப்பு கட்ட வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து அரசு அலுவலரிடம் கேட்டபோது, மூன்று வருடமாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றார்.